அறிவியல்-அறிவோம்: "ஆச்சரியமான மூளையின் சேமிப்பு திறன்"
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு இலட்சம் லாரிகள் நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள்,
நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.
கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. அடுத்தவரோடு வாக்குவாதம் பண்ண முடியாது. ஆனால், கணினிகள் சில வினாடிகளில் மில்லியன் கணக்கில் வித்தியாசமான பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து விடுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நம் மூளை கம்ப்யூட்டரைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேகம் கொண்டது. ஒவ்வொரு வினாடியும் உடலுக்கு மூளை பில்லியன் கணக்கில் சிறுசிறு சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!
மனித மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள், 16,000 கிலோ மீட்டர் நரம்பு இழைகளும் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (ஆல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
செயற்கை நியூரான்
மூளை செல்லை (நியூரான்) செயற்கை யாக வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை புரிந் துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல் கலைக்கழக மருத்துவப் பள்ளி ஆய்வுக் குழுவினர் இந்த நியூரான் செல்லை உருவாக்கி உள்ளனர்.
உடலின் தோற் பரப்பின் அடியில் உள்ள செல்லை குறிப் பிட்ட 3 ஜீன்களைக் கொண்டு முடுக்கி விட்டு நியூரான் செல்லாக உருமாற்றி உள்ளனர். இது வழக்கமாக நியூரான்கள் போல உணர்வுகளை கடத்துவதில் சிறப் பாக செயலாற்றுகிறது. ஒரு வாரத்தில் 20 சதவீத அளவில் வேலை களை வெற்றிகரமாக செய்யும் வகையில் முன்னேறியது.
மூளையின் சேமிப்புத்திறன்.
உங்களது கணினியில் இருக்கும் வன்தட்டு நினைவகத்தில் (Hard Disc) எத்தனை TeraByte பதிவு செய்ய முடியும் என்பது தெரியுமா? 0.5 TB? 1 TB? 2 TB? 4 TB? தற்போது தனிப்பட்ட பாவனைக்கு என்று அமைக்கப்பட்ட கணினிகளில் அதிகபட்சம் 4 TB தான் இருக்கும். சரி, இப்படி நன்றாக உங்கள் கணினி பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே, ஆனால் உண்மை சொல்லப் போனால் உங்கள் மூளையும் ஒரு விதமான Hard Disc தானே? அதில் எவ்வளவு பதிவு செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மனித மூளை சுமார் 100 பில்லியன் நியூரான்கள் கொண்டிருக்கிறது. இந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் சுமார் 1,000 நரம்பிணைப்புகளுடன் (Synapse) இணையமுடியும் என்றும், 1 நரம்பிணைப்பில் 1 Bit பதிவு செய்ய முடியும் என்று எண்ணினால் நமது மூளையில் 100,000,000,000 x 1000 = 100,000,000,000,000 = 100 TeraByte பதிவு பண்ண முடியும். ஆனால், இது குறைந்தபட்சம் தான்! சில அறிவியலாளர்கள் 2.5 PetaByte = 2500 TeraByte பதிவு செய்ய முடியும் என்று கூட சொல்கிறார்கள்!
பிறப்பில் இருந்து பார்த்தது கேட்டது எல்லாமே நம் மூளைக்குள்ளே இன்னும் பதிந்து இருக்கிறது. ஆனால், மூளையில் எந்த இடத்தில் பதிவு செய்து இருக்கிறது என்பது தான் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் போவதைத் தான் நாம் மறதி என்று அழைக்கின்றோம்.
சரி, 2500 TB என்றால் எவ்வளவு தெரியுமா? 2500 TBஇல் 3,000,000 மணி நேரம் தொடர்ந்து பார்க்கக்கூடியதாக TV Serials பதிவு செய்ய முடியும். அல்லது இதே 2500 TBஇல் 41,666,666 மணிநேரம் (4.753 வருடங்கள்) தொடர்ந்து கேட்கக்கூடியதாகப் பாடல்கள் பதிவு செய்ய முடியும்.