அறிவியல்-அறிவோம்"இனிப்புகளின் மேலுள்ள வெள்ளி இழை ஆபத்து"

(S.Harinarayanan)

ஈயம், பித்தளை, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களில், ‘மந்த உலோகம்‘ என்று, வெள்ளி அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளி பல்வேறு இடங்களில்,
பல்வேறு விதமாக உபயோகப்படுத்தப்படுகிறது.நாம் உண்ணும் உணவிலும் வெள்ளியை கலக்கிறோம். உணவின் மேல் வெள்ளியை அணிந்து, அழகு பார்த்து, ரசித்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மைதான்.
தெற்கு ஆசிய நாடுகள் முழுவதிலும், குறிப்பாக இந்தியாவில், விலை உயர்ந்த சுவீட்களின் மீது வெள்ளி நிறத்தில் பளபளவென்று மின்னுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்போது இனிப்புதான் உங்கள் கருத்தைக்கவரும். அதன் மேல் மின்னும் பொருள் என்ன என்ற கோணத்தில் பெரும்பாலும் சிந்திக்கமாட்டீர்கள்.

மெல்லிய வெள்ளி இழைகள் தான் அந்த சுவீட்களின் மீது அமர்ந்து மின்னிக்கொண்டிருக்கிறது. சுபாரி, பான், பீடா, பழங்கள் போன்றவற்றின் மேலும் வெள்ளி இழை பேப்பர்கள் ஒட்டப்படுவதுண்டு.

மென்மை கொண்ட வெள்ளி உலோகத்தை, வெள்ளி படலம், வெள்ளி இழை, வெள்ளி பேப்பர், வெள்ளி ஷீட் என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். ‘வராக்கா’என்று இந்தியில் அழைக்கப்படும் ‘வெள்ளி இழை’, சுவீட்களுக்கு மேலே ஒட்டப்படுகிறது.
வெள்ளி இழை(வராக்) எப்படி தயாராகிறது தெரியுமா?
நூறு கிராம் வெள்ளியை எடுத்து, ஒரு அங்குல அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார்கள். ஒரு வெள்ளித்துண்டு மீது, ஜெர்மன் பட்டர் பேப்பர் என்று அழைக்கப்படும் ஸ்பெஷல் பேப்பரை வைக்கிறார்கள். அதன் மீது மீண்டும் ஒரு வெள்ளித்துண்டு, அதன்மேல் ஜெர்மன் பட்டர் பேப்பர், இப்படி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுகிறது. பின்பு 8 மணி நேரம் மரத்தால் செய்யப்பட்ட சுத்தியலால் அடிக்கப்படுகிறது. வெள்ளித்துண்டு மிகமிக மெல்லிய இழையாக ஆகும்வரை அடிக்கப்படுகிறது.
ஒரு வெள்ளி இழையின் தடிமன் சுமார் 0.025 மில்லி மீட்டர். இது மனித சருமத்தைவிட மென்மையானது.
வராக் எப்படி தாயரிக்கின்றார்கள்?
இறைச்சிக்காக மாட்டை கொன்றவுடன் அதன் குடல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதிலுள்ள ரத்தம் மற்றும் மலம் போன்ற கழிவுகளை சுத்தம் செய்து, இந்த ‘வராக்’ தயாரிப்பாளர்களிடம் விற்பனை செய்வார்கள்.மாடு இறந்த உடனேயே இந்த குடல் எடுக்கப்பட்டுவிடும். இல்லையென்றால் அது விறைத்து விடும். ஒரு மாட்டோட குடல் 540 இன்ச் நீளமும் 3 இன்ச் அகலமும் கொண்டது. இதை சுத்தம் செய்து நீளாக வெட்டினால் 540 இன்ச் 10இன்ச் என விரியும். ‘வராக்’ தயாரிப்பாளர்கள் 9க்கு 10இன்ச் என்ற வீதத்தில் 60 துண்டுகளாக வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பார்கள். இது ஒரு நோட்புக் போல இருக்கும். அதன்பின்னர் மெலிசான வெள்ளி தகட்டை, வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். இந்த தோல் மூட்டையை 1 அல்லது 2 நாள் வரை விடாது அடிப்பார்கள். இப்படி அடித்து, அடித்து அந்த வெள்ளி தகட்டை மெல்லிய தாள்களாக மாற்றுவார்கள்.பிறகு அதை தோல் பையிலிருந்து எடுத்து, குடல்களை நீக்கி, வெள்ளி தாள்களை அடுக்கி வைப்பார்கள். இப்படி தொடர்ந்து அடிப்பதினால் அது மிக மெல்லிய வெள்ளி தாளாக மாறுகின்றது..
தோல் பெட்டியில் வைத்து அடிக்கப்படும் வெள்ளி தகடுகள், மெல்லிய தாள்களாக மாறும் போதும், குடலில் உள்ள திசுக்கள் சூடாக உள்ள இனிப்புகள் மீது இந்த தாள்கள் ஒட்டப்படும்போடு இந்த இனிப்பில் அந்த திசுக்கள் கலந்துவிடுகின்றது. அதனால் இனிப்பில் மாட்டின் குடலில் உள்ள திசுக்கள் கலந்துவிடுகின்றது..சைவ இனிப்பு அசைவ இனிப்பாக மாறுகிறது.

உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள்’ புனேயில் இனிப்புப் பலகாரக் கடைகளில் சோதனை செய்தபோது, வெள்ளி இழைகளுக்குப் பதிலாக அலுமினிய இழைகளை இனிப்புகளின் மீது ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அலுமினியம் உடலில் அதிக அளவில் சேர்ந்தால், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகிவிடும். அது கால்சியத்தை எலும்பில் படியவிடாது. அதனால் மூளையிலுள்ள திசுக்களில் அலுமினியம் படிய ஆரம்பித்து ‘அல்ஸெய்மர் நோய்’ தோன்றக்கூடும்.
அலுமினியம் மட்டுமில்லை, வெள்ளிகூட அதிக அளவில் உடலுக்குள் போனால், அது சருமத்தில் படிந்து, சருமத்தை நீலம் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாற்றிவிடும். இதற்கு மருத்துவ மொழியில் ‘அர்ஜைரியா’ என்று பெயர். இது உடலுக்கு தீங்கில்லை என்றாலும் நல்லது இல்லை.
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டாலும், மக்களுக்கு இனிப்பு உணவுகளின் மீதான மோகம் நீங்கவில்லை. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இனிப்புகளை மிதமான அளவில் சாப்பிடுங்கள். இனிப்புகள் மீது ஒட்டப்பட்டிருப்பது எந்த மாதிரியான இழை என்பதை கண்டறிவது சிரமம் என்பதால், இழை சேர்க்கப்படாத உணவுகளை வாங்கி உண்ணுவதில் ஆர்வம் காட்டவேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022