Today School Morning Prayer Activities - 04.01.19
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.01.19
திருக்குறள்
அதிகாரம்:அடக்கம் உடைமை
திருக்குறள்:129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
விளக்கம்:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
பழமொழி
Little stokes fell great oaks
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
இரண்டொழுக்க பண்புகள்
*புது வருடம் மற்றும் புது பருவத்தில் எல்லோரும் போற்றும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இருக்கும் வகையில் நடப்பேன்
*நான் வாழும் பகுதி மற்றும் சுற்றுப்புறம் பசுமை சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பைகள் தவிர்த்து துணிப்பைகள் மற்றும் பாத்திரம் உபயோகிப்பேன்.
பொன்மொழி
மலர்ந்த முகமும்,இனிய சொல்லும் இன்பமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.
- பாரதியார்
பொது அறிவு
1.தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 12
2. மனித உடலில் இன்சுலினை சுரக்கும் உறுப்பு எது?
கணையம்
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
உருளைக்கிழங்கு
1. உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்தது. எனவே புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
2. உருளைக்கிழங்கு அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி. இதில் சிறுநீரகத்தை சீராக இயக்கும் சக்தி உள்ளது.
3. குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
4. உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.
English words and Meaning
Canvass ஆதரவு கோருதல்
Candid. யதார்த்தமான
Casual. தற்செயலான
Cavity. குழி, பள்ளம்
Capture. கைபற்றுதல்
அறிவியல் விந்தைகள்
சோலைமந்தி
*இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த குரங்குகளாகும்
* இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் இது சிங்க வால் குரங்கு என்றும் அழைக்கப்படும்
* சங்க இலக்கியங்களில் இது நரைமுக ஊகம் என அறியப்படுகிறது
* இவைகள் மழைக்காடுகளின் மரக்கிளைகளில் மட்டும் வாழக்கூடிய ஒர் குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையை கொண்டவை. இவை பழங்கள், இலைகள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், முதுகெலும்பற்ற சிறு விலங்குள் ஆகியவற்றை உண்கின்றன.
Some important abbreviations for students
A.A --
Anti- Aircraft
Automobile Association
A.A.F -
Auxiliary Air force
நீதிக்கதை
குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.
ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.
அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.
அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.
அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.
நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.
இன்றைய செய்திகள்
04.01.2019
* இதுவரை ஆராயப்படாத நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கி சாங் இ-4 என்ற சீன விண்கலம் சாதனை படைத்துள்ளது.
* ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 8-ல் விசாரணை.
* பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது.
* பிரிமியர் பாட்மின்டன் லீக் போட்டியில் பெங்களூருவின் சாய் பிரனீத், ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து உள்ளது. புஜாரா சதமடித்தார்.
Today's Headlines
🌹The Chinese space shuttle Chang E-4 has landed on the dark side of the unexplored moon.
🌹 Sterlite case: Appeal of the Tamil Nadu Government to be heard in the Supreme Court on January 8.
🌹 Reserve Bank has stopped printing 2,000 notes in order to prevent money laundering, tax evasion and cash fraud.
🌹In the Primer Badminton League, Bangalore's Sai Praneeth and Srikanth won and proceeded to the next round.
🌹In the 4th Test against Australia, India scored 303 for 4 wickets in the first day. Pujara scored century💐
Prepared by
Covai women ICT_போதிமரம்