Today School Morning Prayer Activities - 07.01.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.01.19
திருக்குறள்


அதிகாரம்:ஒழுக்கம் உடைமை



திருக்குறள்:131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம்:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

பழமொழி

Your Actions will nail You

தன் வினை தன்னைச் சுடும்

இரண்டொழுக்க பண்புகள்

* எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

* நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொன்மொழி

வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.

   -  ஔவையார்

 பொது அறிவு

1.உலக இந்தி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜனவரி10

2.  சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் எப்போது?

 ஜனவரி 23, 1897

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பிரிஞ்சி இலை





1)பிரிஞ்சி இலையினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் செரிமானத்திற்கு உதவிபுரிந்து, வயிற்று பிரச்சனைகள் வராமல் உடலை பாதுகாக்கிறது.

2) பிரிஞ்சி இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை நெஞ்சு பகுதியில் தடவுவதன் மூலம் சளி, இருமல் தாக்கத்தை குறைக்கிறது.

3) இதன் இலையின் எண்ணெயில் பார்த்தினோலாய்ட் என்ற தாவரச்சத்து அடங்கியுள்ளதால் இவை எதிர்தொற்றாக செயல்பட்டு மூட்டு இணைவு திசுக்களில் ஏற்படும் வலிகளை குணமாக்கி நிவாரணியாக செயல்படுகிறது.

English words and Meaning

Eligible.    தகுதி
Edible.     சாப்பிடக்கூடிய
Eliminate.  தகுதிநீக்கம்
Election.    தேர்தல்
Elements. தனிமம்

அறிவியல் விந்தைகள்

🐝தேனீ...
 .............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.
''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.
🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

Some important  abbreviations for students

AIR   -     All India Radio (Broadcasting)

ASLV     -    Augmented Satellite Launch Vehicle

நீதிக்கதை

சந்தனமா சவுக்கா

ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் சென்றான்.
“”தாகத்துக்கு நீர் கிடைக்குமா?” என்று வினவினான். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்ததோடு தான் கொணர்ந்திருந்த கம்பங்கூழையும் தந்தான்.
வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருந்த அவனுக்கு ஏதாவது உபயோகமான பரிசை அளிக்க விரும்பினான் அரசன்.
தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைக் காண்பித்து, “”வேண்டிய மரங்களை வெட்டிக்கொள்!” என்று அனுமதிச் சீட்டும் வழங்கினான்.
அதற்குள், அவனது பரிவாரங்களும் அவனைப் பார்த்துவிட்டன. அரசன் அவர்களோடு சென்றான். ஆறு மாதம் கழித்து மீண்டும் வேட்டையாட வந்தான். காட்டானை அவன் கண்கள் தேடின.
அவனும் அரசனைப் பார்த்ததும் ஓடிவந்து, “”நல்லாயிருக்கீங்களா? உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க!” என்றான்.
“”இப்போ வசதியாயிருக்கியா?” என்று விசாரித்தான் அரசன்.
“”ரொம்ப சவுகர்யமா இருக்கேங்க. ஒருவேளை அரிசிச்சோறு சாப்பிடுகிறேன். முதல் நாள் மரத்தை வெட்டினப்போ அதிகாரிங்க வந்துட்டாங்க! அனுமதிச்சீட்டைக் காண்பிச்சதும், “நீ சிரமப்படாதே நாங்களே வெட்டிக்கறோம்’ன்னுட்டாங்க. முந்தி தினம் கால்ரூவா கிடைக்கும். இப்ப ஒரு ரூபாய் தராங்களே! அதோட வேலை செய்த கை சும்மா இருக்குமா? கூடமாட வெட்டறதுதான்!” என்றான் அப்பாவியாக.
அரசன், “ஏமாற்றுப்பேர்விழிகள் இல்லாத இடமே இல்லையா?’ என்று அயர்ந்துபோனான். சந்தனமரத்துக்கும் சவுக்குமரத்துக்கும் வித்தியாசம் காணாதவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். இதனால் உலக அறிவும் அதிர்ஷ்டத்தைப் புரிந்து பயன்படுத்திக்கொள்வதும் முன்னேற்றத்துக்கு முக்கியம் என்பது புரியுதா …


இன்றைய செய்திகள்
07.01.2019

* தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் அடுத்த இரண்டு நாள் இரவு உறைபனி நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* கேட் நுழைவுத் தேர்வில் 11 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு : தமிழகத்தில் 2 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை.

* சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வளையப் பந்தாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு, அவரது சொந்த ஊரில் கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

* ஹாக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9-வது தேசிய ஹாக்கி பி டிவிஷன் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

* சிட்னியில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, இந்திய அணி பாலோ-ஆன் வழங்கியது.


Today's Headlines

🌹 Tamilnadu and Puducherry, for the next 5 days, will be in dry weather.
The Chennai Meteorological Center has announced that the next two-day frost will last in Valparai and its surrounding mountain areas.

🌹 In GATE Entrance Examination 2 candidates in Tamil Nadu scored 99.99 per cent and centum result,It was a big record

🌹Silver medalist at the national level ringball champion in Chattisgarh, our government school student was welcomed in his hometown by  his hometown people, teachers, students , yesterday with great enthusiasm

🌹The 9th National Hockey B Division Championship tournament begins today in Tamil Nadu in regardance  for the Tamil Nadu Division of Hockey ,India.

🌹 Australia scored 300 runs in the first innings of the 4th Test in Sydney. Following this, the Indian team offered follow- on🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank