Today School Morning Prayer Activities - 08.01.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.01.19
ஜனவரி - 8, 1942


ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள்


இங்கிலாந்தில் பிறந்த இந்த நூற்றாண்டின் தன்னிகரற்ற இயற்பியல் விஞ்ஞானி. அண்ட வெளி தோற்றம், அதன் பரிமாண வளர்ச்சி,  கருத்துளைகளை குறித்து ஆராய்ந்தார்.
A Brief history of time, The universe in a nutshell, My brief history உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

திருக்குறள்

அதிகாரம்:ஒழுக்கம் உடைமை

திருக்குறள்:132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.

பழமொழி

அடாது செய்தவன் படாது படுவான்

Fly that pleasure which painth afterwards

இரண்டொழுக்க பண்புகள்

* எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

* நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொன்மொழி

மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.

             - பாரதியார்

  பொது அறிவு

1.இந்திய ராணுவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 15

2. இந்திய சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜனவரி 25

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

நெருஞ்சி செடி




1. நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்;  உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும்.

2. நெருஞ்சில் கனிகளில், நிலைத்த எண்ணெய், பிசின்கள் மற்றும் நைட்ரேட் உப்புகள் காணப்படுகின்றன. நெருஞ்சில் விதைகள், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு ஆகியவற்றைக் குணமாக்கும்.

English words and Meaning

Filthy.     அசுத்தமான
Fence.     வேலி
Fabric.     துணி
Fertilizer  உரம்
Fetch.   ( போய்  )         கொண்டு வா

அறிவியல் விந்தைகள்

தேனீக்கள்
🐝ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.
உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.
...... தொடரும்

Some important  abbreviations for students

ASI     -      Archaeological Survey of India

ATS -       Anti Tetanus Serum


நீதிக்கதை

சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான்.
“இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்’ என்பான். அவர்கள் அதைச் செய்து முடித்ததும் இனிப்பு தர மாட்டான். மாறாக, அவர்களை விரட்டி விடுவான். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. நண்பகல் நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். சிறுவனாக இருந்த அவன் மகன், அப்போதுதான் கடையைப் பார்த்துக் கொள்வான். ஒருமுறை அந்தக் கடைக்காரன் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றான்.
“”பலகாரங்கள் வைப்பதற்காக வாய் அகன்ற பானைகள் முப்பது செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்?” என்று கேட்டான்.
“”ஒரு வாரத்தில் தயாராகி விடும்,” என்றனர்.
குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர வேண்டுமே… என்ன செய்வது என்று சிந்தித்தான் கடைக்காரன். வழக்கம் போலச் சிறுவர்களை ஏமாற்றுவோம் என்று நினைத்தான்.
சிறுவர்களை அழைத்த அவன், “”மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வர வேண்டும். எடுத்து வருகிறீர்களா?” என்று கேட்டான்.
“”அப்படி நாங்கள் எடுத்து வந்தால் எல்லாருக்கும் நிறைய இனிப்பு தருவீர்களா?” என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.
“”கொண்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்,” என்றான் கடைக்காரன்.
“”நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது,” என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் சிறுவர்கள்.
ஒவ்வொரு பானையாக அவர்கள் கடைக்குக் கொண்டு வந்தனர். எல்லாப் பானைகளும் வந்து சேர்ந்தன.
“”எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம்,” என்றனர் சிறுவர்கள்.
“”நான் எப்போது உங்களுக்கு இனிப்பு தருவதாகச் சொன்னேன். நீங்கள் கேட்டதற்கு, கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்றுதானே சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். பிறகு பார்க்கலாம்,” என்று அவர்களை விரட்டினான் கடைக்காரன்.
தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணிப் புலம்பியப்படியே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள்.
அந்த வழியாக வந்த கோபால், “”ஏன் அழுது கொண்டே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“”கோபால் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார்,” என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர்.
“”கவலை வேண்டாம்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் யாரும் அந்தக் கடைக்குள் வரக் கூடாது. வெளியே நில்லுங்கள்,” என்ற கோபால் கடைக்குள் நுழைந்தார்.
அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.
இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த கோபால், இனிப்புப் பாத்திரத்திற்குள் கையை விட்டான். இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், “” என்ன இனிப்பை எடுத்து சாப்பிடுகிறாய்? பணம் தராமல் எதையும் தொடக்கூடாது,” என்று கத்தினான்.
“”தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் இப்படி இனிப்பை சாப்பிடுவதை அவர் பொருட்படுத்தமாட்டார். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்,” என்றான் கோபால்.
“”அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது,” என்று கத்தினான் சிறுவன்.
தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், “”மகனே! எறும்பு வந்தால் விரட்டு… இல்லையேல் அதை அப்படியே விட்டுவிடு. எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா?” என்று கத்தினான்.
இதைக் கேட்ட கோபால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். “இனிப்பு நிறைந்திருந்த ஒரு பாத்திரத்தைத் தூக்கினான். சிறுவர் களுக்கு வழங்க இதுபோதும்’ என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டான்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், “”அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை,” என்று கத்தினான்.
இதைக் கேட்ட கடைக்காரன் கோபம் கொண்டான்.
“”என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? நான் எழுந்து வந்தால் உன் தோலை உரித்து விடுவேன். எறும்பு இனிப்பை எடுத்துச் செல்வதற்காக, யாராவது கவலைப்படுவார்களா? போனால் போகட்டும் எவ்வளவு இனிப்பை எடுத்துச் சென்றுவிடப் போகிறது. பேசாமல் இரு,” என்று கத்தினான்.
இனிப்புப் பாத்திரத்துடன் வெளியே வந்தான் கோபால். அங்கிருந்த சிறுவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக இனிப்புகளைத் தந்தான். அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர்.
“”உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன்,” என்ற கோபால் அங்கிருந்து புறப்பட்டான்.
தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் நொந்து போனான்.


இன்றைய செய்திகள்
08.01.2019

* அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

*   பயணிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு: ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடம் முன்பே வரவேண்டும்- முதல்கட்டமாக 202 நிலையங்களில் அமலாகிறது.

* இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது.

* வரலாறு படைத்தது இந்திய அணி: 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்தை 4-1 வீழ்த்தி இந்தியா அபார சாதனை படைத்தது.


Today's Headlines

🌹Tamil Nadu School Education Minister K.A. Sengottaiyan said the Taminadu Government had requested the central government to provide a computer system for 9th and 10th grade students in government schools.

🌹New control for passengers that they should be 20 minutes before the departure of the train .It was  the first launched in 202 stations.

🌹 Indonesia has a powerful earthquake. The earthquake recorded 6.6 on the Richter scale.

🌹 History of Indian team: Indian team for the first time in 72 years won  Australian team  in the Test series in their land

🌹In the Asia Cup football tournament, India had a record 4-1 victory beating Thailand💐

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)