அறிவியல்-அறிவோம்- "பிரெட்" சாப்பிடுவதால் கேன்சர் வருமா?உண்மை அறிவோம்.

யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் அவரைப் பார்க்க செல்பவர்கள், கட்டாயம் வாங்கிச் செல்லும் பொருட்களில் பிரெட் இடம்பெற்றிருக்கும். விலை மலிவாகவும், அதேசமயம் சாப்பிடுபவருக்கு நிறைவாகவும் இருக்கும். 


தீயில் வாட்டியோ, நெய் அல்லது வெண்ணெய் தடவியோ, நடுவே காய்கறிகளை வைத்துச் சாண்ட்விச் என்ற பெயரிலோ, முட்டை விரும்பிகளாக இருந்தால் பிரெட் ஆம்லெட் வடிவிலோ ரொட்டிகளைச் சாப்பிடுகிறார்கள். தெருவுக்குத் தெரு துரித உணவகங்களும் பேக்கரிகளும் நிறைந்திருக்கும் சூழலில் பிரெட், பர்கர், பாவ் பாஜி, பீட்ஸா போன்றவற்றைச் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மாவையும், ஈஸ்ட்(Yeast) மற்றும் தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள் தான் பிரட். இது உலகப் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

‘கோதுமை மாவு அல்லது மைதா மாவில் செய்யப்படும் ரொட்டி வகைகள் கார்போஹைட்ரேட் நிறைந்தவைதானே’ என்று படித்தவர்களும், ‘டாக்டரே சாப்பிடச் சொல்றாங்க. அதுல என்ன கெடுதல் இருக்கப் போகுது?’ என்று படிக்காதவர்களும் நினைப்பதில் தவறேதும் இல்லை.

பிரெட் சத்தானதா?

பிரட் சாப்பிடுவதால் புரதங்கள், வைட்டமின்கள் ஒரு நூல் அளவு கூட கிடைப்பதில்லை. குறைந்த அளவு கலோரி கொண்டது.
பிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும்.
   
உடல் எடை அதிகரிக்கும்

gn: justify;">
பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

கார்போஹைட்ரேட் பெருமளவில் உள்ளது.

கார்போஹைட்ரேட் பெருமளவில் உள்ளது
பிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். பொதுவாக குறைந்தளவு கார்போஹைட்ரேட் உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும். அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்தால், அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமானால் ‘ப்ரைன் ஃபாக்' (brain fog) நோயை உண்டாக்கும். அதாவது மூளையின் அறிவாற்றல் சக்தியை குறைக்கும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் சீரற்ற நிலையை உருவாக்குவதால், நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

புற்றுநோய் ஆபத்து.

உலகச் சுகாதார மையத்தின்(WHO) ஓர் அங்கமாகச் செயல்பட்டுவருகிறது புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு. இந்த அமைப்பு உலகம் முழுக்கப் பல்வேறு மாதிரிகளைப் பரிசோதித்து அவற்றில் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்களை ஐந்து வகையாகப் பிரித்துப் பட்டியலிட்டிருக்கிறது.

புற்றுநோயை நிச்சயம் உருவாக்கும் ஆபத்து கொண்டவற்றை ‘Grade 1’ என்று வகைப்படுத்தியிருக்கிறது. முதலுக்கும் கடைசிக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறவற்றை 2A, 2B என்று இரண்டு வகையாகத் தரம் பிரித்திருக்கிறார்கள்.

அவை நோய் ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளவை (Possibly), நிகழ்தகவு கொண்டவை (Probably). இதில் புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியம் கொண்டவை பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது பொட்டாசியம் புரோமேட். நிகழ்தகவு கொண்டவை என்ற பிரிவில் இடம்பெற்றிருக்கும் பொருட்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் என்பது நிச்சயமில்லை. அதனால் அதில் ஆபத்து குறைவு.

புற்றுநோயை உருவாக்கும் என்பதால் உலக அளவில் பல்வேறு நாடுகள் பொட்டாசியம் புரோமேட்டுக்கு ஏற்கெனவே தடை விதித்திருக்கின்றன. ஆனால் பொட்டாசியம் புரோமேட், ஆக்ஸிஜனேற்றம் அடைந்து புரோமைடாகிவிடுவதால் அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்ற சமாதானத்துடன் இந்தியா அதன் பயன்பாட்டுக்கு அனுமதியளித்திருந்தது.அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவைத் தொடர்ந்து உண்ணும் பொருட்களில் பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI). இந்த பொட்டாசியம் புரோமேட் பிரெட்டில் சேர்க்கப்படுகிறது.

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து

எந்தவொரு வேதிப்பொருளும் அளவுக்கு மிஞ்சும்போதுதான் ஆபத்து. அது பொட்டாசியம் புரோமேட்டுக்கும் பொருந்தும். இது சிறந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால் பிரெட் தயாரிப்பிலும் பேக்கரி துறையிலும் பொருட்களை உப்பச் செய்யவும், மிருதுவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பின்போது முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் அடையாமல் கசடாக இருக்கும் பொட்டாசியம் புரோமேட்டின் அளவு அதிகமாக இருந்தால், அது மனிதர்களிடம் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் அதிகம்.
பிரெட் தயாரிப்பில் 50 (p.p.m.) அளவிலும் பேக்கரி பொருட்களில் 20 (p.p.m.) அளவிலும் பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்தலாம் என அனுமதித்திருக்கிறது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI).

உணவுப்பொருட்களில் குறியீடு.

உணவுப் பொருளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் குறிப்பிட்டால், அது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் குறியீடுகள் (Code) மூலம் குறிப்பிடுகிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் குறியீடுகளைத் தவிர்த்துவிட்டு வேதிப்பொருட்களின் பெயர்களை அச்சிட்டால் தரத்தைச் சரிபார்த்து வாங்க முடியும்.


புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகள், நம் நினைப்பைத் தகர்க்கின்றன. ரொட்டி, பாவ், பர்கர், பன், பீட்ஸா போன்றவற்றில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய வேதிப்பொருட்கள் இருப்பதாக இந்த மையம் தெரிவித்திருக்கிறது.

வெள்ளை பிரெட் தவிருங்கள்.

வெள்ளை பிரட் வாங்காதீர்கள். உடலுக்கு நல்லதல்ல. அவை முற்றிலும் மைதாவினால் செய்யப்படுபவை. 
 எந்த ஒரு உணவையும் சுவைக்காக உண்ணாமல் உடல் நலத்திற்காக உண்ணுவோம்  நோயற்று வாழ்வோம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)