அறிவியல் உண்மை - விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?
விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லாஅமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும்.
எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7, ------------ 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர்.
பூஜயம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம் தொடங்கிவளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்தஎண்ணைக் கூற இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக் கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது