சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறவும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும்  நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் கலை, அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் அதிகமான படிப்புகளுக்கான  நெட்  தேர்வை இப்போது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. அதுபோல, வேதி அறிவியல், பூலோகம், சுற்றுச்சூழல், கடல்சார் மற்றும் கோள்கள் சார்ந்த அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல், உயிர் அறிவியல் போன்ற படிப்புகளுக்கான  நெட் தேர்வை சி.எஸ்.ஐ.ஆர். நடத்துகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான இந்த சி.எஸ்.ஐ.ஆர்.   நெட் தேர்வு வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வுக் கட்டணத்தைப் பொருத்தவரை பொதுப்பிரிவினர் ரூ. 1000  செலுத்த வேண்டும். அதுபோல ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ. 500 என்றளவிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank