Today School Morning Prayer Activities - 22.02.19
திருக்குறள்
அதிகாரம்:அழுக்காறாமை
திருக்குறள்:167
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
விளக்கம்:
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
பழமொழி
God helps those who help others
பிறருக்கு உதவுவோருக்கு இறைவன் உதவுவான்.
இரண்டொழுக்க பண்புகள்
1) அனைத்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.
2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.
பொன்மொழி
நேரம் என்பது சட்டைப்பையில் உள்ள பணம் மாதிரி அதை இழக்கக் கூடாது; பத்திரமாகச் செலவு செய்ய வேண்டும்.
- பிராங்க்ளின்
பொது அறிவு
1.தமிழ்நாட்டிலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி
2.2013ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?
ஆலிஸ் மன்றோ
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
ப்ரோக்கோலி
1. முட்டைக்கோஸும் காளானும் கலந்து செய்த மாதிரி ஒரு வடிவம்... பளிச்சிடும் பச்சை நிறம்... அது புரோக்கோலி.
2. இதில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன.
3. கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.
English words and Meaning
Gloss. குறிப்புரை,
புறத்தோற்றம்
Glove. கையுறை
Glide. சறுக்கு
Grace. தயவு, நயம்
Gorge சந்து, இடுக்கு
அறிவியல் விந்தைகள்
ஓசோன்
மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டஓசோன் (O3), காரமான மணமுடைய வெளிர் நீலநிற வாயு ஆகும்
* சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களில் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக விளங்குகிறது. இதற்கான பல காரணங்களில் ஓசோனும் ஒன்று.
* இப்படலம், சூரியனிலிருந்து வெளிவரும் அதீத ஆற்றலுடைய புறஊதா கதிரை (UV-C மற்றும் UV-B) உறிஞ்சிக் கொண்டு தீங்கற்ற கதிர்களை பூமிக்குள் விடுகின்றது.
Some important abbreviations for students
* FSSA - Food Safety and Standards Authority of India
* FDR - Flight Data Recorder
நீதிக்கதை
நாய், சிறுத்தை, குரங்கு
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.
நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.
ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.
எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.
சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது….
”இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்” என்றது.
இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.
இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.
அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.
எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.
குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.
அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.
”இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “”குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.
இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.
அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.
”அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?” என்றது.
காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.
நீதி: வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்.
இன்றைய செய்திகள்
22.02.2019
* 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
* சென்னை சென்ட்ரல், திருச்சி உள்ளிட்ட 36 முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
* சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.
* இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள் அடித்ததன் மூலம் அதிக சிக்சர் அடித்த பாகிஸ்தான் வீரர் அப்ரிடியை இவர் முந்தியுள்ளார்.
Today's Headlines
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸There is no general examination for classes 5 and 8 announced Minister Chengottaian
🌸 Indian Railways plans to ban plastic usage in 36 major railway stations including Chennai Central and Trichy.
🌸 Samsung's most anticipated compatible smartphone has been introduced in the name of Galaxy Fold.
🌸The UK Foreign Minister has said that the Century Memorial Day is the right time to apologize for the Jallianwala Bagh massacre.
🌸Krisgail scored 12 sixes in a match against England yesterday, and has been ahead of Pakistan's Afridi, highest score.
🌹🌹🌹🌹🌹🌹🌹
Prepared by
Covai women ICT_போதிமரம்