Today School Morning Prayer Activities - 25.02.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.02.19
திருக்குறள்




அதிகாரம்:அழுக்காறாமை

திருக்குறள்:169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

விளக்கம்:

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.

பழமொழி

We live in deeds, not in years

எத்தனை நாள் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பது மேல்.

இரண்டொழுக்க பண்புகள்

1.உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்.

2. இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்.

பொன்மொழி

இறுதியில் இலட்சியத்தை அடைவிக்கும் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஓர் இலட்சியமாயிருத்தல் வேண்டும்.

 - கதே

பொது அறிவு

1.பாரத ரத்னா விருது பெற்ற முதல்   பெண்மணி யார்?

 திருமதி.இந்திரா காந்தி -1971

2. உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி யார்?

  பாத்திமா பீபி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

முட்டை




1. தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் முட்டையில்தான் உள்ளது.தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம் அதுவும் இந்த முட்டையில் வெள்ளை கருவில் அதிகமாக உள்ளது.

2. குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.

3. முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒருநாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.

English words and Meaning

Calltaxi அழைப்பூர்தி
Charger. மின்னூட்டி
Chips.  சீவல்
Download பதிவிறக்கம்
Enquiry. விசாரனை

அறிவியல் விந்தைகள்

வேம்பு அல்லது வேப்பை

*இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம்.
*இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். *வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது.
* அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை  *வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். *
வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக உபயோகப் படுத்த படுகின்றது.

Some important  abbreviations for students

* GAGAN   -  GPS-aided Geo-augmented Navigation.

* GAIL  -  Gas Authority of India Limited

நீதிக்கதை

அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, “பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்றான்.

அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன!
ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, “முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?” என்று சீறினார்.
அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, “உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!” என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் “அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?” என்று கேட்டான்.
“இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!” என்றான் அலி. “தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?” என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.
சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், “வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!” என்றான்.
“என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!” என்றான் அலி!
“இன்று ஒருநாள் மட்டும் செய்” என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான்.
மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.
சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, “ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?” என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி “இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!” என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.
கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, “நீ இன்னும் சாகவில்லையா?” என்று கேட்டார்.
“இல்லை, பிரபு!” என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, “வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!” என்றான். “உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?” என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், “பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?” என்று அக்பர் கேட்டார்.
“பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்” என்றான் பீர்பல்.
“அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?” என்று அக்பர் கேட்க, “அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கேட்டான் பீர்பல்.
அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், “நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்” என்றவர் அலியைப் பார்த்து, “பிழைத்துப் போ” என்றார்

இன்றைய செய்திகள்
25.02.2019

* சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவுக்கான புதிய தூதராக இளவரசி ரிமா பிண்ட் பாண்டர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* வேலூர் மாவட்டத்தில் 56 சதவீதம் நீர் பற்றாக்குறை... எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் வேண்டுகோள்.

* நாடு முழுவதும் நலிவடைந்துள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12-லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ளார்.

* உலக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரியும், பெண்கள் பிரிவில் அபூர்வி சண்டேலாவும்  தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

* இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸The new Ambassador for the first time in Saudi Arabia , Princess Rima Pint Bander has been appointed

🌸Water deficit of 56% in Vellore district ... So the authorities are requesting the use of water as austerity.

🌸 GST for constructional residential houses to revitalize the country's weakened real estate sector The federal finance minister has announced that tax will be reduced from 12 to 5 percent.

🌸India's Sourabh Chaudhry won gold medal in the World Cup. Sourabh Chaudhary,  in the men's section and in the women's section Aboorvi Chandela has also scored gold in 10m air pistol event,

🌸 The International Olympic Committee has ordered a temporary ban to host international sports in India.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)