Today School Morning Prayer Activities - 09.02.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.02.19
திருக்குறள்




அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள்:156

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

விளக்கம்:

தமக்குத் தீங்கு செய்தவரை தண்டித்தவர்க்கு தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

பழமொழி

Like priest : like people

அன்பர் எப்படியோ , தொண்டரும் அப்படியே.

இரண்டொழுக்க பண்புகள்

1.  விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2. என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி

உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

    - விவேகானந்தர்

 பொது அறிவு

1.இந்தியாவின் முதல் ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 குஜராத்

 2.இந்திய  தேசிய ராணுவ பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

 ஹரியானா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பால்





1. உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.

2. பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

3. எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும்.  பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.

English words and Meaning

Odometer - பயணத் தொலைவு அளவி
Orchestra - இசைக் குழு
Oyster - கிளிஞ்சல், உணவு வகை சிப்பி
Overwhelm - அதிகமான உணர்வு, உணர்வுகளால் மூழ்கடித்தல்
Outstanding. - தலைசிறந்த

அறிவியல் விந்தைகள்

ஆமைகள்
* இவை நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும்.
* இவைகள் நிலத்திலும் நீரிலும் வாழ்பவை.
*நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.
*தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன.
 *ஆமை பொதுவாகத் தனிமையை விரும்புக்கூடிய உயிரினமாகும்.
* இவற்றின் ஆயுள் அதிகம். சில ஆமைகள் 150  ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.

Some important  abbreviations for students

DNA.  -   Dioxyribo Nucleic Acid

DRDO.    -    Defence Research and Development Organisation


நீதிக்கதை

ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும்

இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது.

பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.

மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும்.

இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.

வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.

ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.

அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.

“நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறியது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.

இன்றைய செய்திகள்
09.02.2019

* கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக மாற்று மரக் கன்றுகள்:விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தோட்டக்கலைத்துறை அழைப்பு.

* மருத்துவ பட்ட மேற்படிப்பு நீட் தேர்வில் தஞ்சாவூர் மாணவர் செரின் பாலாஜி அகில இந்திய அளவில் 7-வது இடம்; தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.

* பதவி உயர்வு மூலம் வட்டாரக்கல்வி அலுவலர் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

* நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

* சென்னையில் நடைபெறும் ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.


Today's Headlines

* Alternate timber saplings instead of trees affected by kajah storm: Horticultural sector call for free .

* Thanjavur student Cheran Balaji is ranked 7th in the Indian Institute of Medical Ranking Neet Examination also topper in the list of Tamilnadu.

* Block Education Officer post will be filled by promotions.  Government of Tamilnadu Government Issued GO .

* India won by 7 wickets in the 2nd T-20 against New Zealand.

* Indian tennis players progressed to the quarter finals in  ATP Challenger  Chennai Open Tennis Tournament.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)