பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.03.19 Covai women ICT

திருக்குறள்


அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:177


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

பழமொழி

You cannot sell the cow and have her milk too

கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி

மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.

    - காந்தியடிகள்

பொது அறிவு

1.  சத்யமேவ ஜெயதே என்ற  என்ற வார்த்தை எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

 முண்டக உபநிஷதம்

2. தேசபந்து என்று அழைக்கப்பட்ட விடுதலை வீரர் யார்?

 சித்தரஞ்சன் தாஸ்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

எள் உருண்டை




1. எள் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் மற்றும் கிருமி நாசினி தன்மை கொண்ட வேதி பொருட்கள் அதிகம் கொண்டது. எள் உருண்டையை குறிப்பாக குழந்தைகள் சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்கள் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு ஆளாவது குறையும். ஜுரம், சளி போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும்.

2. எள் உருண்டையை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.
மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி சிரங்கு படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு.

3. மது, சிகரட் போன்ற போதைப்பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களின் உடலில் அதிகளவு நச்சுக்கள் தங்கியிருக்கும். இந்த போதை பழக்கத்தை விட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் ஒரு எள் உருண்டையை சாப்பிட அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையையும் பெறும்.

English words and Meaning

Practical -       செய்முறை
Preparation - தயாரித்தல்
Clearly -   தெளிவாக
Accuracy-துல்லியமாக
Reactions - எதிர்வினை

அறிவியல் விந்தைகள்

குருதி
*குருதி/இரத்தம் என்பது விலங்கினங்களின், உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு உடல் திரவம் ஆகும். *குருதியானது தமனி , சிரை அல்லது நாளம் எனப்படும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும்
*இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள்.
*தமிழில் குருதியை , இரத்தம், உதிரம், செந்நீர் என்ற பிறபெயர்களாலும் அழைப்பர்.
*குருதியானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை எடுத்து செல்லும்.

Some important  abbreviations for students

* HVDC   -  High Voltage Direct Current

* HP. - Hindustan Petroleum

நீதிக்கதை

சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

இன்றைய செய்திகள்
07.03.2019

* கல்வி,வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

* தூய்மையான நகரங்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்தூர் நகரத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.

* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தனது 500-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

* ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 The High Court notices to the Tamil Nadu government for reservation for transgender in education and employment.

🌸President Ramnath Govind awarded Indore for clean city which stands first once again.

🌸Tamilnadu and Puducherry Plus 1 public exam started yesterday. 8.21 lakhs students  was writing this exam.

🌸 India won the 500th victory in one-day cricket by winning the match against Australia yesterday.

🌸In the first round of the All England Open badminton series, India's leading badminton player P V Sindhu lost in the first round

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)