பிளஸ் 2வுக்கு பின் எந்த படிப்பை தேர்வு செய்யலாம்?

பாடத்திட்டங்களை தாண்டி, திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே, எதிர்காலத்தில் சிறப்பான வேலைவாய்ப்புகள் அமையும்,'' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசினார்.




தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:எதிர்காலத்தில் துறைகளின் வளர்ச்சி, மாற்றங்களை ஆய்வு செய்து, உயர்கல்வி பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.


 சராசரி மனிதன், 82 சதவீதம் இயந்திரங்களை சார்ந்தே வாழும் நிலை விரைவில் வரவுள்ளது. முழுதாக இயந்திரமயமாக மாறும், ஓர் தொழில்நுட்ப புரட்சியை நாம் பார்ப்போம்.


 'இன்டலிஜென்ட் பிராசஸ் ஆட்டோமேஷன்' என்ற தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டால், நான்கு ஆண்டுகளில், வேலைவாய்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும்.எந்த படிப்பு சிறந்தது?


பொறியியல் படிப்பை பொறுத்தவரையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம் என்ற பாடப்பிரிவுக்கு, நல்ல வேலைவாய்ப்பு உண்டு. இப்பாடப்பிரிவு, அண்ணா பல்கலையின் கீழ், 12 கல்லுாரிகளில் புதிதாக துவங்கப்படவுள்ளது.


 அடுத்தபடியாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இ.இ.இ., இ.சி.இ., மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் என்ற வரிசையில், முக்கியத்துவம் அளிக்கலாம்.பொறியியல் படிக்கும் பொழுதே, 'கேட்' தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள். மெக்கட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட சில பாடங்கள் கேட் தேர்வுக்கான பாடமாக இல்லை.


பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட சில படிப்புகளை, ஆராய்ச்சிகளில் ஆர்வம் இருந்தால் மட்டும் தேர்வு செய்யுங்கள்.மருத்துவ பிரிவில், எம்.பி.பி.எஸ்., கால்நடை, இந்திய மருத்துவம் என்ற வரிசையில் தேர்வு செய்யலாம்.


 கலைப்பாடப்பிரிவை பொறுத்தவரையில், பி.காம்., ஆங்கிலம், தமிழ் போன்ற பாடங்களை தேர்வு செய்யலாம்.


பள்ளி ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள், தாவரவியல், விலங்கியல் பாடங்களை தேர்வு செய்தால் கட்டாய வாய்ப்பு எதிர்காலத்தில் உண்டு.இவ்வாறு, அவர் கூறினார்.


பொறியியல் படிப்பை பொறுத்தவரையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம் என்ற பாடப்பிரிவுக்கு, நல்ல வேலைவாய்ப்பு உண்டு. இப்பாடப்பிரிவு, அண்ணா பல்கலையின் கீழ், 12 கல்லுாரிகளில் புதிதாக துவங்கப்படவுள்ளது


.கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி?பாடத்திட்டங்கள் தாண்டி கற்றுக்கொடுக்கும், கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்.


நேரடியாக சென்று நீங்கள் தேர்வு செய்யும் துறைக்கான ஆய்வக வசதியுள்ளதா, ஆசிரியர்களின் தகுதி போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.


 வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள். ஜப்பானிஷ், ஜெர்மன் படித்தால், உலகளவில் பல வாய்ப்புகள் உள்ளன.



எந்த துறை படித்தாலும், அரசு தேர்வுகளுக்கு பகுதி நேரமாக தயார்படுத்திக்கொள்ளுங்கள்.'


அப்டேட் இல்லையா அவுட்டேட்தான்!'


தொழில்நுட்பத்தை 'அப்டேட்' செய்யவில்லை எனில், 'அவுட்டேட்' ஆகி விடுவோம். பொறியியல் மட்டுமின்றி, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப ஆதிக்கம் இருக்கும். பாடத்திட்டங்களை தாண்டி, பல்துறை அறிவையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தினால் வெற்றி பெறலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022