Today School Morning Prayer Activities - 04.03.19

திருக்குறள்


அதிகாரம்:வெஃகாமை


திருக்குறள்:174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

விளக்கம்:

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.

பழமொழி

Where there is no knowledge ; there are no doubts

ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும் என்பதை எப்போதும் நினைவில் கொள்வேன்.

பொன்மொழி

அறிவே அனைத்திலும் சிறந்தது. மனம் அதற்கு அடங்கி நடந்தால் வாழ்வு சிறந்து விளங்கும்.

- பாரதிதாசன்

பொது அறிவு

1.வண்ணத் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் அடிப்படை வண்ணங்கள் எவை?

 நீலம் ,சிவப்பு ,பச்சை

2. உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?

 வெனிசுலா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பனங்கற்கண்டு




1. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.  பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

2. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

3. இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும்  நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

English words and Meaning

Future.         எதிர்காலம்
Dedication.அர்ப்பணிப்பு
Decline.   வீழ்ச்சி,சிதைவு
Association.சபை,கழகம்
Biography. சரித்திரம்

அறிவியல் விந்தைகள்

அணு
*அணு என்பது உயிரற்ற பொருள்களின் அடிப்படை அலகு ஆகும். இது மிகச் சிறிய அலகுடையது.
* ஒரு தனிமம் ஒரே வகை அணுவால் ஆனது.
* பழைய அணுக் கொள்கை இதை பிரிக்க முடியாது என்று உரைத்து.
* ஆனால் மேம்பட்ட அறிவியல் தொழில் நுட்பம் அணு மூன்று வகை உப துகள்களால் ஆனது என்று கண்டறிந்து கூறியது.
* அவையாவன எலக்ட்ரான் எனும் எதிர் மின் அயனி, புரோட்டான் எனும் நேர் மின் அயனி, நியூட்ரான் எனும் நடுநிலை அயனி ஆகும்.
* வேதி வினை களின் அடிப்படை அணுக்களே.

Some important  abbreviations for students

* HDI    -  Human Development Index

* HDTV   -  High Definition Television

நீதிக்கதை

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய செய்திகள்
04.03.2019

* குழந்தைகளின் விவரங்கள் முறைகேடாக சேகரிப்பு: டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்த அமெரிக்கா.

* வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் - அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்.

* பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் உள்ள குரங்கு அருவி நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நீர் வரத்தின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் குரங்கு அருவி மூடப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.

* 22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரர் ஒற்றையர் பிரிவில் 100-வது சர்வதேச பட்டத்தை வென்றார்.

* வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 715 ரன்கள் எடுத்ததன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Collecting the Details of child inappropriately  : Tick-Tak processor was fined Rs 40 crore by America

🌸Aadhaar number is mandatory for bank account and SIM cards - Presidential approval for emergency legislation.

🌸The monkey  falls in Pollachi next to Azhiyar is declared to be closed tomorrow. The Forest Department has  announced that the monkey falls is closed due to the drought inundation.

🌸Roger Federer, who played for 22 years in international tennis, won 100th international singles title.

🌸 New Zealand have registered their highest score in the International Test matches by scoring 715 runs in the first innings of the Test against Bangladesh.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)