Today School Morning Prayer Activities (Covai women ICT) - 13.03.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.03.19
திருக்குறள்


அதிகாரம்:புறங்கூறாமை


திருக்குறள்:182

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

விளக்கம்:

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

பழமொழி

Live with your means

வரவுக்கேற்ற செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள்
 1. எனது உணவு விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உலகில் உணவு  இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே  கைகூப்பித்  தொழுகிறது.

           - கன்பூசியஸ்

பொது அறிவு

1.அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரம் எது?

 இட்டாநகர்

2. அசாம் மாநிலத்தின் தலைநகரம் எது?

 திஸ்பூர்

பதப்படுத்தப்பட்ட மற்றும் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களால் ஏற்படும் தீமைகள்




1. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க அதில் அளவுக்கு அதிகமாக சோடியம் கலக்கப்படுகிறது. இது இதய நோய்களுக்கும், சிறுநீரக பாதிப்புக்கும் காரணமாகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கும் இது துணை புரிகிறது.

2. நீங்கள் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலோரி, கொழுப்பு அளவு, ரசாயன கலவை விவரம் முதலியவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.

3. அன்றாடம் நிறைய பேர் சாப்பிடும் உணவு வகைகளான ப்ரெட், பட்டர், பிஸ்கெட் போன்றவற்றிலும் சோடியம் கலந்துள்ளது. அவைகளையும் குறைந்த அளவிலே சாப்பிடுங்கள்.

4. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. அவசர கதியில் இயங்கும் மக்களுக்கு இது வரப்பிரசாதம்தான். ஆனால் இந்த வகை உணவுகளில் சத்துக்கள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லை. அதனால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் தோன்றும் அபாயம் உருவாகிறது.

English words and Meaning

Concentration ஒருநிலைப்படுத்துதல்
Commitment பொருந்துதல், வாக்களிப்பு
Determine தீர்மானித்தல்
முடிவு
Deduct.  கழிவு, தள்ளுபடி
Administrative. நிர்வாகம்,, ஆட்சி

அறிவியல் விந்தைகள்

1. ஒரு கரப்பான் பூச்சி தலை இல்லாமல் 9 நாட்கள் வரை வாழும்
2. மனித உடம்பின் வலுவான தசை நாக்கு
3. ஒரு நாளில் மனித உடம்பு 15 இலட்சம் சிவப்பு இரத்த செல்களை உருவாக்கும்.
4. முத்து வினிகரில் கரைந்து விடும்
5. சூரியனின் எதிர் திசையில் மட்டுமே வானவில் தோன்றும்.

Some important  abbreviations for students

*ICICI    -   Industrial Credit and Investment Corporation of India Limited

* ICRC -   International Committee of the Red Cross

நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

இன்றைய செய்திகள்
13.03.2019

* மக்களவைத் தேர்தலில் மகளிர் மட்டும் வாக்குச்சாவடி டெல்லியில் அமைய உள்ளது. நாட்டில் முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதில், பெண் அலுவலர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

* செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் ரயில்வே தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடத்தப்படுகின்றன. இதற்கான அறிமுக வகுப்பு மார்ச் 17-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது.

* : தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 14 முதல் 29 வரை நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வை 9.59 லட்சம் பேர் எழுதுகின்றனர். 38,176 தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

* பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றார்.

*இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடக்கிறது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 In the Lok Sabha election for the first time in the country,separate booth for women was placed in Delhi and  female officers are been appointed  in that booth

🌸 Free special training courses for the Railway Examination are conducted on behalf of Chengalvara Nayakar Foundation. The introductory class will be held on March 17 at PTL Chengalvara Naicker Polytechnic premises in Chennai Vepperi

🌸In Tamilnadu and Puducherry on March 14 to 29, the 10th grade students of 9.59 lakhs and 38,176 individuals  are going to write the SSLC exam informed  Government  exam Director.

🌸In PNB Paribas men's singles third round of the open tennis tournament, star player Rafael Nadal  Was qualified

🌸 India and Australia will face the 5th and last ODI of the day at Delhi Ferozepah Kotla Maidan tomorrow.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)