Today School Morning Prayer Activities (Covai women ICT) - 15.03.19
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.03.19
திருக்குறள்
அதிகாரம்:புறங்கூறாமை
திருக்குறள்:184
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.
விளக்கம்:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
பழமொழி
Like father like son
தந்தை எவ்வழியோ தமையன் அவ்வழி
இரண்டொழுக்க பண்புகள்
1. எனது உணவானது விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உலகில் உணவு இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.
பொன்மொழி
இதுவரை யாரும் கூறாததைக் கூறுவது ஒன்றே சிறப்பு என்று எண்ண வேண்டாம்; இதற்குமுன் யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பேயாகும்.
- கதே
பொது அறிவு
1. இந்தியாவில் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
V.S. ரமாதேவி
2. இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?
சுனில் அரோரா
குளிர்பானங்களினால் ஏற்படும் தீமைகள்
1. மேலும் மேலும் பருகத் தூண்டும் சுவையூட்டிகள், தித்திக்க வைக்கும் சர்க்கரைப் பொருட்கள், கண்ணைக் கவரும் வண்ண நிறமூட்டிகள், நறுமண ரசாயனங்கள், நுரைக்கச் செய்யும் கரியமிலவாயுபோன்றவற்றை நீரில் கலந்து தயாரிக்கும் ரசாயனக் கலவைதான் குளிர்பானங்கள். இவற்றில் ஆல்கஹால் சேர்க்கப்படுவதில்லை. எனவே இவை மென்பானங்கள் (Soft Drinks) என்று அழைக்கப்படுகின்றன. பெயருக்குத்தான் இவை மென்பானங்கள்.
2. சில குளிர்பானங்களில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளில் பெரும்பாலானவையும் கடும் நோய்களை ஏற்படுத்தக் கூடியவையாகும். சில குளிர்பானங்களில் சேர்க்கப்படும் "தார்ட்ராசின்' '( Tartrazing) எனப்படும் செம்மஞ்சள் நிறச் சாயம் நம் தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது புற்று நோய்க்கும் காரணமாகலாம். எனவே பின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில், இந்த நிறப் பொருட்களை குளிர்பானங்களில் சேர்ப்பதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். "கார்மொசின்' (Carmosine) எனப்படும் சிவப்பு நிறம், உணவில் நச்சுத் தன்மையை ஏற்படுத்துவதுடன் புற்று நோயையும் உண்டாக்கும்.
3. மொத்தத்தில் சில குளிர்பானங்களில் கலக்கப்படுபவைகளில் தண்ணீரைத் தவிர மற்ற யாவும் பயங்கரமான ரசாயனப் பொருட்கள்தான். இவ்வளவு ஆபத்துகளையும் சுமந்துவரும் குளிர்பானங்களை இனியும் நாம் அருந்த வேண்டுமா? கோடைகாலத் தாகத்தைத் தணிப்பதற்கு மட்டும் அல்ல, எப்போதுமே இளநீர், பதநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, மோர் போன்றவற்றை அருந்துவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை இல்லாதபோது இருக்கவே இருக்கிறது தண்ணீர். தண்ணீர் மிக அருமையான பானம்தான் அல்லவா!
English words and Meaning
Thirsty. தாகம்
Stamina. சகிப்புத் தன்மை
Appetite. பசி
Fascinate. வசீகரம்,கவர்
Defect. குறை
அறிவியல் விந்தைகள்
*உமிழ் நீர் இல்லாமல் உணவை ருசி பார்க்க இயலாது.
* ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு நீல நிறத்தில் காணப்படும்.
* நம் உடலில் உள்ள கார்பன் அல்லது கரிமம் கொண்டு 9,000 பென்சில்களுக்கு உபயோகப படுத்த முடியும்.
* பறக்கும் தன்மையுள்ள ஒரே பாலூட்டி வெளவால்
* பென்குயின்களின் பார்வை நீருக்கு அடியில் மிகத் தெளிவாக இருக்கும்.
Some important abbreviations for students
* i.e. - id est; that is
* IEA. - International Energy Agency
நீதிக்கதை
கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.
அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது: மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூவினர். பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.
இன்றைய செய்திகள்
15.03.2019
* முப்படை வீரர்களின் துணிச்சலை போற்றும் வகையில் கீர்த்தி சக்ரா, ஷவுர்யா சக்ரா உள்ளிட்ட விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கி கவுரவித்தார்.
* தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி, தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
* செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளதாவும் அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார் என்றும் நாசா அதிகாரி தெரிவித்தார்.
* உலக மகளிர் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
* இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
Today's Headlines
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸President Rajnath Govind presented Keerthi Chakra and Shourie Chakra on honouring the courage of Three military forces
🌸The school director has urged that the parliamentary elections to be held on April 18 and the examinations should be completed by April 12.
🌸NASA official said that the first person to travel to Mars will be a women from America
🌸India's Joshna Sinnappa advanced to the quarterfinals in the world women's squash Open .
🌸The two world number one champions Novak Djokovic of Serbia and Najimi Osaka of Japan were out of the fray because they lose their match in Indian Wells tennis championship
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Prepared by
Covai women ICT_போதிமரம்