Today School Morning Prayer Activities - 06.03.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.03.19
திருக்குறள்




அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:176

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

விளக்கம்:

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன்,  தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டழிந்து விடுவான்.

பழமொழி

One man's meat is another man's poison

ஒருவருக்குக் கொண்டாட்டம் ; மற்றவருக்குத் திண்டாட்டம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்

பொன்மொழி

அணு அளவும் பிறரை ஏமாற்றாமல் வாழ்பவனை கடவுளுக்கு நிகராக உலக மக்கள் மதிப்பர்.

   - பாரதிதாசன்

 பொது அறிவு

1.இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருது எது?

 பரம் வீர் சக்ரா

 2.பரம்வீர் சக்ரா விருது கடைசியாக எப்பொழுது யாருக்கு வழங்கப்பட்டது?

   6 ஜூலை  1999 - மேஜர் விக்ரம் பாத்ரா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பனைவெல்லம்




1. இதில் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும்.வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

2. எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும்.

3. பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்படும் போது தகுந்த பயனை அளிக்கும்.

4. சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

English words and Meaning

Legible.       தெளிவான
Semifinal.    அரையிறுதி
Punishment தண்டனை
Hitch            முடிச்சு, தடை
Corporeal    உடல்வருத்தும்.      தண்டனை

அறிவியல் விந்தைகள்

வெப்பம்
* மனித வாழ்வில் மிக முக்கியமானது வெப்பம் ஆகும்.
*இது ஒரு ஆற்றல். இதன் முக்கிய மூலம் நீங்கள் நினைத்தது போல சூரியன் தான்
* ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் அசையும் போது வெப்பம் உருவாகிறது. அசைவு அதிகரிக்கும் போது வெப்பம் அதிகரிக்கும்
* வெப்ப நிலை என்பது எவ்வளவு வேகமாக மூலக்கூறுகள் அசைகின்றன என்பது பொறுத்தது ஆகும்.
*வெப்ப நிலை அளக்க ஃபாரன்ஹீட், செல்சியஸ் மற்றும் கெல்வின் என்று மூன்று அலகுகள் உள்ளன.

Some important  abbreviations for students

* HTML   -  Hyper Text Markup Language

* HUDCO    -   Housing and Urban Development Corporation

நீதிக்கதை

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.

ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…”

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. “இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

“நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”.

பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…”

பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.

அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.

“உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

இன்றைய செய்திகள்
06.03.2019

* உலகில் உள்ள தலை நகரங்களில் மிக மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி தேர்வாகி உள்ளது.

* காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று 1 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

* சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

*  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 40வது ஒருநாள் சதத்தை எடுத்தார். மேலும் கேப்டனாக  சர்வதேச கிரிக்கெட்டில் 9,000 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய லெஜண்ட் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் உடைத்தார்.

* இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வையுங்கள் என்று அனைத்து நாடுகளுக்கும உலக மல்யுத்தம் பெடரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Delhi is the worst and the most contaminated city among the world headquarters.

🌸 A study conducted with 1 lakh people said diabetes caused by avoiding or decreasing breakfast.

🌸Chennai Water Drinking Board has introduced 'Chennai Drinking Water application

🌸 Virat Kohli scored his 40th one-day hundred in ODI against Australia. He also broke the record of Australian legend Ricky Ponting with 9,000 runs in international cricket as captain.

🌸 World wrestling federation has requested  all the countries to stop contracts with India

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)