இருசக்கர வாகன திட்டம்: ஜூன் 20 இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பணிபுரியும் மகளிர் தங்களது
பணியிடங்களுக்கு எளிதாக செல்வதற்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத் திட்டமானதுதமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. எளிதாக இயக்கக்கூடிய (Gearless/Auto geared) கியர்லஸ்/ஆட்டோகியர் இருசக்கர வாகனங்கள் வாங்க இத்திட்டம் உதவிபுரியும்.
மேலும், மாற்றுத்திறனாளி மகளிர் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் வாங்கலாம்.மகளிருக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.மேலும், மாற்றுத்திறனாளி மகளிருக்கு கூடுதல் வசதி பொருத்தப்பட்ட வாகனத்திற்கு மானியத்தொகையாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.31,250/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.பயன்பெறும் மகளிர் தங்களுக்கு விருப்பப்பட்ட வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் Retro - fitted வகையிலான வண்டி வாங்கினால் மட்டுமே கூடுதல் மானியத் தொகை வழங்கப்படும்.
மகளிர் பயனாளி, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும், தமிழகத்தில் வசிப்பவராகவும், விண்ணப்பிக்கும் தருணத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவராகவும், ஒட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.2018-19ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்குரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை 20.06.2019 முதல் 04.07.2019 மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலம் சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும்” இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.