எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம் வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம் வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள எழுத படிக்க தெரியாத 
மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம் வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்க  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிழையுடன் வாசித்து எழுதும் மாணவர்கள், எளிய கணக்குகளை மட்டும் செய்ய தெரிந்த மாணவர்கள், மொழிப்பாடத்திற்குரிய திறன்களை அடைய பயிற்சி அளிக்கப்பட வேண்டிய மாணவர்கள், அனைத்து கணித அடிப்படை செயல்பாடுகளை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டிய மாணவர்கள் என்று இம் மாணவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் அடைவு ஆய்வின்படி சி, டி தரத்தில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் பயிற்சி கட்டகங்களில் உள்ள படிநிலைகளை ஒன்று முதல் நான்கு வரையுள்ளவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.


இந்த குறைதீர் கற்றல் கட்டகங்கள் வழங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு தினம்தோறும் மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 4 மணி வரையும் ஒரு மணி நேரம் குறைதீர் கற்பித்தல் சிறப்பு பயிற்சி ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்து ஆசிரியர்கள் இந்த பயிற்சியை அளிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு ஒவ்வொரு படிநிலைகளுக்கும் 20 நாட்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘குறைதீர் கட்டகங்களை முறையாக பயன்படுத்தி மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றல் அடைவினை உயர்த்திட முயற்சிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank