இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?
Income Tax Return (ITR) e-filing Online : இவை அனைத்தும்
முறையாக கால்குலேட் செய்யப்பட்டிருந்தால், இன்கம் டேக்ஸ் ரிட்டனை உடனடியாக விண்ணப்பிக்கலாம். Income Tax Return (ITR) e-filing Online: எப்போதுமே ஃபார்ம் 16 மூலமாகத் தான் வருமான வரி தாக்கல் செய்வோம். ஆனால் நம் நிறுவனங்களில் அந்த படிவத்தினை வாங்கி பூர்த்தி செய்து, அனுப்புவது என்பது பெரும் தலைவலி தான். இனி அந்த கவலை இல்லை. இணையத்தின் மூலம் உங்களின் தகவல்களை பூர்த்தி நீங்கள்
நேரடியாக வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யலாம். உங்களின் ஃபார்ம் 16 என்பது உங்களின் வருமானம், வரி, மற்றும் டி.டி.எஸ் என்னென்ன என்பதை திட்டவட்டமாக விளக்கும் ஒரு சான்றாகும். payslips உங்களின் பே ஸ்லிப்பினை (payslips) வைத்து நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்று கணித்துக் கொள்ள இயலும். ஒரு நிதி ஆண்டில் நீங்கள் பெற்ற 12 மாதத்திற்கான பே ஸ்லிப்பினையும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நெட் சேலரியையும் கணக்கில் கொள்ளுங்கள். 26-AS 26-AS ஃபார்மில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்களின் டி.டி.எஸ் மதிப்பினையும், உங்களின் பே ஸ்லிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் டி.டி.எஸ் மதிப்பினையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.