பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.07.19

திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:232

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

விளக்கம்:

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம், வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

பழமொழி

Never cast the oar till you are out

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.

2. டீ. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்.

பொன்மொழி

ஒரு இடத்தில் நெருப்பை உருவாக்குவதும் , அதை வளரவிடாமல் தடுப்பதும் மனிதனின் மனவெழுச்சி தான்.ஆக்கமும் அழிவும் நம் செயல்களின் முடிவாகிறது...

----டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

 பொது அறிவு

1.உலகளாவிய அங்கீகாரம் பெற்ற இந்திய வானிலை மையம் எது?
சென்னை வானிலை மையம்

2.மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது?         தென்னாப்பிரிக்கா

English words & meanings

* Task - a piece of work given to a person, கொடுக்கப் பட்ட பணி

* Tusk - a long pointed teeth like one seen in elephants or hog, தந்தம்

ஆரோக்ய வாழ்வு

பருத்திப்பால் சளியைக் கரைக்கவும்,  மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

Some important  abbreviations for students

KCL - Potassium Chloride
FX - Fracture
(in medical)

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.
அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: “மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?”

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்”

குயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

வெள்ளி

சமூகவியல் & விளையாட்டு

* ஆசியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி , இந்தியா, சீனா பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளின் வழியாகப் பாயும் ஒரு எல்லை நதியாகும்.

 பெரும்பாலான நதிகளுக்கு பெண் பெயர் இருந்தாலும் பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் பெயரை பெற்றுள்ளது.

பாரம்பரிய விளையாட்டு - 3




தட்டாங்கல் விளையாட்டு*ந
இது பழங்கால பெண் குழந்தைகள் விரும்பி விளையாடும் ஒரு விளையாட்டு.

விளையாடும் முறை
மேலே எறியப்பட்ட கல் கீழே வருமுன் கீழே உள்ள கற்களை கையில் எடுக்க வேண்டும்.

விதி
கீழே உள்ள கற்களை ஒன்றில் இருந்து எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அனைத்து கல்லும் எடுத்து விட்டால் பழம் (வெற்றி) பெற்றவர் ஆவார்.
தவற விட்டால் அடுத்த நபரிடம் கொடுக்க வேண்டும்.

வேறு பெயர்கள்
சுழற்சி காய், சுட்டிக் கல், பலகல் மற்றும் பத்தாம் கல் என பல பெயர்கள் உண்டு.

பயன்
விரல் நரம்புகள் பலப்பட்டு இரத்த ஓட்டம் சீராக இருக்கும்

இன்றைய செய்திகள்
05.07.2019

* போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய டிஜிபி உத்தரவு.

* இனி தமிழிலும் வங்கித்தேர்வு எழுதலாம். (ஆர்ஆர்பி எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.)

* ராணுவ போலீசில் 100 சிப்பாய் பணியிடங்களில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்

* மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று.ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

* பலத்த காற்று காரணமாக தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு.

* உலக்கோப்பை பெண்கள் கால்பந்தின் இறுதி ஆட்டத்திற்கு  நெதர்லாந்து அணி தகுதி பெற்றது.

* உலக கோப்பைக் கிரிக்கெட் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Today's Headlines

🌸 DGP ordered police to wear helmet.It was mandatory.

 🌸 We can write RRP bank exam (which was to village bank )in Tamil along with13 state language ,said the Central Finance Minister Nirmala Sitharaman in parliament.

🌸 2 lakh women have applied for 100 seats in the the army.

 🌸 The major hurricane in Mannar Bay area .Rameshwaram fisherman  were asked to avoid fishing

 🌸 wind power generation is increased  in Tamil Nadu due to strong winds.

 🌸Netherlands in the final of  women's soccer tournament

 🌸 wold cup cricket : West Indies won by 23 runs against Afghanistan.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)