பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.07.19

திருக்குறள்


அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள்:241


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம்:

செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

பழமொழி

FAMILIARITY BREEDS CONTEMPT

   பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

*இரண்டொழுக்க பண்புகள்*

1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவை எழுதும் போது திருத்தமான மொழி நடையை கையாள்வேன்.

2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் போற்றுவேன்.

பொன்மொழி

பிரபஞ்சத்தில் எல்லா பொருட்களும் புறம்,அகம் என இரு தோற்றங்கள் உடையது.அகத்தை விளக்காத புறத்தோற்றம் பயனற்றது....

------- வேதாத்திரி மகரிஷி

 பொது அறிவு

1. தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார்?
செல்வி பாத்திமா பீவி.
2. உப்புத் தண்ணீரிலும் வளரும் தாவரங்களைக் கொண்ட காடு எது ?

மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி காடுகள்

English words & meanings

* Donkey - beast of burden, கழுதை
40 மில்லியன் கழுதைகள் உலகம் முழுவதும் உள்ளது.
5000 வருடங்களாக வேலைக்கு உபயோகப் படுத்த படுகிறது.

* Daisy -  an attractive flower.
சூரிய காந்தி பூவின் குடும்பத்தை சார்ந்த மலர்
33,000 வகைகள் உள்ளன. உலக‌ம் முழுவது‌ம் உண்டு .

ஆரோக்ய வாழ்வு

மஞ்சள் கலந்த பால் தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து  வளைவுத்தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்.

Some important  abbreviationstudents

* AIL - Aeronautical India Limited

* AIR - All India Radio

நீதிக்கதை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை.

பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது.

பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான்.

மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா.

“நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா.

“நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார்.

மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான்.

வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான்.

பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார்.

ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர்,

“உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார்.

முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான்.
“ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா?”

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலக்டர்.

“நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”

“உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

வியாழன்

அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல் -

"Dancing grapes🍇 (நடனமாடும் திராட்சை)




தேவையான பொருள்கள்:

கண்ணாடி டம்ளர், திராட்சைப் பழங்கள், சோடா.

சோதனை:

1. சோடா பாட்டிலைத் திறந்து கார்பன் டை-ஆக்ஸைடு வாயு குபுகுபு என்று வெளியே வந்துகொண்டிருக்கும்போதே ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் சோடாவை ஊற்றுங்கள்.

2. டம்ளரில் உள்ள சோடாவில் இரண்டு அல்லது மூன்று திராட்சைப் பழங்களைப் போடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்?

நடப்பது என்ன?

முதலில் சோடா நீரில் திராட்சைகளைப் போட்டவுடன் கண்ணாடி டம்ளரின் அடியில் மூழ்கிவிடும். சிறிது நேரத்தில் திராட்சைப் பழங்கள் மெதுவாக சோடா நீரின் மேல் மட்டத்துக்கு வரும். மேல் மட்டத்துக்கு வந்த திராட்சைப் பழங்கள் சுழலும்.

காரணம்
சோடா நீரில் உள்ள வாயு குமிழ்கள் திராட்சை மேல் வந்து ஒட்டிக் கொள்ளும் அப்போது அது இலேசாகி மேல் செல்லும். அங்கு குமிழ்கள் உடைந்த உடனே எடை கூடி கீழ் சென்று விடும் மறுபடியும் குமிழ்கள் ஒட்டும் போது மேல் சென்று விடும்.

கணினி சூழ் உலகு

அனைத்துப் பள்ளிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ள நிலையில் QR videos ஐ எவ்வ்வாறு கணினியிலேயே scan செய்வது... என்பதற்கான காணொளி இதோ....

காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்


இன்றைய செய்திகள்

18.07.2019


* சந்திராயன்-2 ஏவுகணை ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்.

* 149 வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணம்: நாட்டின் சில நகரங்களில் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

* தமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை நூலகங்களாக மாற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு.

* இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

* உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா ‘ஈ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

Today's Headlines

🌸 Chandrayaan-2 missile will be launched on July 21st or 22 nd, says ISRO officials

 🌸 After 149 years a rare Lunar Eclipse has occurred. It appears red in some places of our country
 🌸 Schools without students in Tamil Nadu will be transformed into libraries ,announced education Minister

 🌸PV Sindhu and Srikanth advanced to the 2nd round in the Indonesian Open Badminton.

 🌸 Competition schedule for the qualification round of World Cup Football tournament has been released.  India is in' E category.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)