பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.07.19
திருக்குறள்
அதிகாரம்:அருளுடைமை
திருக்குறள்:242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
விளக்கம்:
பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்லவழி எனக் கொள்ளல் வேண்டும்.
பழமொழி
As is the king, so are subjects
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
இரண்டொழுக்க பண்புகள்
1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவை எழுதும் போது திருத்தமான மொழி நடையை கையாள்வேன்.
2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் போற்றுவேன்.
பொன்மொழி
ஒவ்வொரு மனிதனிடத்திலும் களங்கமற்ற குழந்தை உள்ளம் இருக்கிறது. அதேபோல் பேராசை,வெறுப்பு , பகை போன்ற நச்சும் இருக்கிறது...
சூழ்நிலையால் அவை வெளிப்படுகிறது.
----- கௌதம புத்தர்
பொது அறிவு
1. மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் எந்த நாட்டில் உள்ளது?
ஜிம்பாப்வே.
2.தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எங்கிருந்து பெறப்படுகிறது?
ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து.
English words & meanings
* Eagle - a bird which can fly very high
கழுகு.
மிக உயரத்தில் பறக்கும்.
மிக வலிமையானது. கன்று குட்டியை கூட தூக்கி கொண்டு பறக்கும் வலிமை வாய்ந்தது.
ஆரோக்ய வாழ்வு
மஞ்சள் கலந்த பாலில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்.
Some important abbreviations for students
* IDES - Indian Defence Estate Service
* IIS - Indian Information Service
நீதிக்கதை
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது.
ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.
“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.
“சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.
“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.
“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?
வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு
தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மார்க்கின் முடிவில் அப்பல்லோ பண்டர் பகுதியில் உள்ள நீர்முனையில் இந்தியாவின் நுழைவாயில் அமைந்துள்ளது.
இந்தியாவின் நுழைவாயில் 20 ஆம் நூற்றாண்டில் மும்பையில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.
கிங்-பேரரசர் ஜார்ஜ் மற்றும் ராணி-பேரரசி மரியட் அப்பல்லோ பண்டர் ஆகியோர் 1911 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
பாரம்பரிய விளையாட்டு - 3
பச்சைகுதிரை என்னும் பாரம்பரிய விளையாட்டின் நன்மைகள், விளையாடும் முறையை விளக்கும் இராமப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்..
காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய செய்திகள்
19.07.2019
* தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசியும், 35 -வது மாவட்டமாக செங்கல்பட்டும் உதயமாக உள்ளது.
* நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ராஜஸ்தானின் கலு காவல் நிலையம்.
* படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்: கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!
* டபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்
* ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.
Today's Headlines
🌸In Tamilnadu New districts will be raised soon, They are Tenkasi as 34th and Chengalpattu as 35th
🌸 Rajasthan's Kalu Police Station ranks in the top list of the best police stations in our country.
🌸 Additional Taxation bill was filed in assembly for the Omni buses with berth facility . So there is a chance of increasing fares!
🌸 In Tabor Athletic competition ,Hima Das won the gold in 200m race
🌸In the Junior World Cup rifle shooting, Indian player Anish Panwala won the gold medal.
Prepared by
Covai women ICT_போதிமரம்