BE - Online கலந்தாய்வு தயாராவது எப்படி?

நாளை மறுநாள் முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவங்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு


*பொறியியல் கலந்தாய்வு என்றாலே மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் திரண்டு வந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது

*இதைப் போக்கும் வகையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும் அதே முறையில் கலந்தாய்வு நடக்க உள்ளது

*மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதால் ஆன்லைன் கலந்தாய்வு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், தயாராவது எப்படி என்பது தொடர்பாக கல்வியாளர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்

*கலந்தாய்வில் பங்கேற்கும் முன்பு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் எவை என்பதை ஒரு நோட்புக்கில் தயார் செய்து கொள்வது நல்லது

*ஒரு மாணவர் எத்தனை கல்லூரிகள் மற்றும் எத்தனை பாடப்பிரிவுகளை வேண்டுமானாலும் விருப்பப் பட்டியலில் கொடுக்கலாம் என்பது ஆன்லைன் முறையின் சிறப்பு அம்சம்

 *அதேபோல ஒரே கல்லூரியில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை படிக்க விரும்பினாலும் அதற்கு ஏற்ற வகையில் முன்னுரிமை அடிப்படையில் விருப்பப் பட்டியலில் கொடுக்க வேண்டும்

 *விருப்பப் பட்டியலை சமர்ப்பித்த பிறகு மாணவர்களுக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக அந்த விருப்ப பட்டியலை இறுதி செய்ய வேண்டும்

 *அடுத்த இரு நாட்களில் மாணவர்கள் கொடுத்த விருப்பப் பட்டியலிலிருந்து அவர்களின் தரவரிசை எண்ணுக்கேற்ப கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அப்போது 3 வாய்ப்புகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படும்

*ஒன்று... கல்லூரியை நான் ஏற்றுக்கொள்கிறேன்
 *இரண்டு... இரண்டாவது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க விரும்புகிறேன்

*மூன்று... கலந்தாய்வில் இருந்தே நான் வெளியேறுகிறேன் என்ற வாய்ப்புகள் வழங்கப்படும்

*இதில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். கல்லூரியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற வாய்ப்பை விரும்புபவர்கள், படிவத்தை பதவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரியில் கொடுத்து சேர்ந்துவிடலாம்

*ஒரு கல்லூரியை தேர்வு செய்வதற்கு முன்பு அந்தக் கல்லூரி NAAC,NBA போன்ற தேசிய அங்கீகாரம் பெற்றதா என்பதை www.tneaonline.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன

*கல்லூரி விருப்ப பட்டியல் தயாரிப்பு, கலந்தாய்வில் பங்கேற்கும் முறை குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கல்லூரிகளுக்குமான கட் ஆஃப் மதிப்பெண்களை பார்த்து விட்டு விருப்பப் பட்டியலை தயார் செய்ய வேண்டும்

 *தேசிய தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே, கல்வி கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்று இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அதை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது


*ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் மாணவர்கள் அந்த கல்லூரியை நேரடியாக ஒருமுறை நேரில் சென்று பார்த்து விடுவது சிறப்பானது. கவரும் வகையில் ஒரு கல்லூரியின் பெயர் இருக்கிறது என்பதற்காகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு ஊரில் இருக்கிறது என்பதற்காகவோ அந்த கல்லூரியில் சேர்ந்து விட்டால் பின்பு மாணவர்கள் கடுமையான நெருக்கடிகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்

*மேலும் கல்லூரியில் படிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த மாணவர்களிடம் விவரங்களைக் கேட்டு அதனையும் சரிபார்த்து கல்லூரியை தேர்ந்தெடுப்பது நல்லது

*ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பது தொடர்பாக மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை 044-22359901 மற்றும் 044- 22359902 ஆகிய இலவச தொலைபேசி எண்கள் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

*இதுமட்டுமல்லாமல் பொறியியல் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 46 இடங்களில் இலவச சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

*பொறியியலில் எந்தப் படிப்பை தேர்வு செய்து படித்தாலும் நிச்சயம் புரிந்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது. எனவே அதற்கு சிறந்த கல்லூரியில் படிப்பது அவசியமாகும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)