B.Ed மாணவர் சேர்க்கை விதிகள் அறிவிப்பு!
தமிழக கல்லுாரிகளில்,
பி.எட்.,மாணவர் சேர்க்கைக்கான விதிகளை, உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் பணியில் சேர, பட்டப்படிப்பு முடித்து, பி.எட்., கல்வியியல் படிப்பையும் முடிக்க வேண்டும்.
தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் உள்ள, 700 கல்லுாரிகளில், பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது.
தமிழக உயர்கல்வித் துறை நடத்தும் கவுன்சிலிங் வாயிலாக, இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும். உயர்கல்வித் துறை சார்பில், லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி, இந்த ஆண்டு கவுன்சிலிங்கை நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும். இந்நிலையில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான, விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, பட்டப் படிப்பு முடித்தவர்கள் மற்றும் இன்ஜினியரிங் முடித்த வர்கள், பி.எட்., படிப்பில் சேரதகுதியானவர்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை பட்டப் படிப்பு, திறந்தநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட்., படிப்பில் சேர முடியாது. இந்தாண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்தில் இடம்பெற்ற, கணினி அறிவியல், கணினி செயல்முறைகள் பாடங்களும், பி.எட்., படிப்புக்கான கல்வித் தகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன