அஞ்சல்துறை உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள
திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கு பள்ளி மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நிரஞ்சனா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: அஞ்சல் தலை சேகரிப்பை மாணவர்களிடையேஊக்கு விக்கும் விதமாக தீனதயாள் ஸ்பர்ஷ் யோஜனா எனும் உத வித்தொகை திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறி முகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஓராண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும்மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பள்ளி இறுதித் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.