DIKSHA Mobile App-ல் புதிய வசதி - எவ்வாறு ஆசிரியர்கள் பயன்படுத்துவது ? வழிமுறைகள் வெளியீடு.

இனி DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் desktop அல்லது laptop களின் வழியே திரைவீழ்த்திகளில்  மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டு காட்ட முடியும்.

இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
இதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்.
1. https://diksha.gov.in/explore என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.
2. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின்  பெயரை டைப் செய்யவும்.
எ.கா. 10 ஆம் வகுப்பு கணக்கு பாடபுத்தக  structure காண 10_maths என DIKSHA explore-  search bar ல் type செய்யவும்.
3. குறிப்பிட்ட பாடநூலில்  உங்களுக்கு தேவையான பாடத்தலைப்பை பாட அலகு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் தேர்ந்தெடுக்கவும்.
4. குறிப்பிட்ட பாட அலகில் list ஆகும் வீடியோக்களில்  தங்களுக்கு தேவையானதை  play செய்யவும்.
5. Play ஆகும் போது வீடியோவின் கீழே download symbol காட்டும் அதனை தொடுவதன்  மூலம் அந்த வீடியோவை mp4 ஆக பதிவிறக்கம் செய்துக்கொள்ள  முடியும்.
6. அதனை நீங்கள் mobile ல் download செய்திருந்தால் data cable மூலமாக laptop/desktop க்கு மாற்றி பள்ளிகளில் உள்ள திரை வீழ்த்திகளில்  வீழ்த்தி பயன்படுத்தலாம்.
குறிப்பு : இவை state level content team create அல்லது edit செய்த content கள் என்பதால் இவற்றை மீண்டும் தங்கள் Youtube account ல் பதிவேற்றம் செய்து share செய்வதையோ  , அதன் மூலம் ads கொண்டு வருமானம் பெருவதையோ முற்றிலும் தவிர்க்கவும்.
இன்னும் சில மாதங்களில் chrome UI கொண்டு மொத்த book structure ஐயும் download செய்து offline ல் பயன்படுத்தும் option வரும் என்பதால் தேவையில்லாமல் வீடியோக்களை  download செய்து share செய்வதையும்  தவிர்க்கவும்.
தனிப்பட்ட download களுக்காக  மட்டும் இந்த வசதியை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)