பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.08.19
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.08.19
English words & meanings
திருக்குறள்
அதிகாரம்:புலான்மறுத்தல்
திருக்குறள்:252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
விளக்கம்:
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; அதுபோல புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.
பழமொழி
Pride gothe before a fall
ஆணவம் அழிவை தரும்
இரண்டொழுக்க பண்புகள்
1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.
2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.
பொன்மொழி
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல... இடையூறுகளும் துன்பங்களுமே.
- மேத்யூஸ்.
பொது அறிவு
1.உலகிலேயே மிகப்பெரிய தேசிய கொடியைக் கொண்ட நாடு எது?
டென்மார்க்.
2. எந்த நாடுகளின் தேசியகொடியில் சூரியன் உள்ளது?
அர்ஜென்டினா மற்றும் உருகுவே
1. Octopus - eight legged ocean creature. எண்காலி.
எட்டு கால் போன்ற அமைப்பு கொண்ட கடல் வாழ் உயிரி.
இதற்கு மூன்று இதயங்கள் உண்டு
இதன் இரத்தம் நீல நிறத்தில் காணப்படும்.
ஆரோக்ய வாழ்வு
ஒரு அடி அளவு சாக்லெட் நமக்கு 150 அடிகள் நடக்கும் ஆற்றலைத் தருகிறது.
Some important abbreviations for students
• dept. - Department
• div - Division
நீதிக்கதை
கத்தரிக்காய் ஓட்டம்!
கத்தரிக்காய் ஓட்டம்!
அந்த ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய காய்கறித் தோட்டம் இருந்துச்சாம். அந்தத் தோட்டத்துல நிறைய்ய்ய்ய்ய்ய காய்கறிகள் இருந்துச்சாம். அதில், பர்பிள் நிற கத்தரிக்காய்களும் முளைச்சிருந்துச்சாம். அதுல மூணு கத்தரிக்காய்கள் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். செடியில், அடுத்தடுத்து இருந்த மூணும் ஊஞ்சல் மாதிரி ஆடி விளையாடுமாம்.
டெய்லியும் காலையில ஷவர்ல குளிக்கிறது, மண்ல இருக்கிற சத்துகளைச் சாப்பிடறது, சூரிய ஒளியில காயுறதுனு ரொம்ப என்ஜாய் பண்ணிட்டிருந்துச்சுங்க.
பக்கத்து ஊர் விவசாயிக்கு பர்பிள் கத்தரிக்காயைத் தன் தோட்டத்துல விளைவிக்க ரொம்ப நாளா ஆசை. அந்தக் கத்தரிக்காய் வெளைஞ்ச ஊரைத் தேடி வந்தாராம். இதைத் தெரிஞ்சுகிட்ட மூணு பர்பிள் கத்தரிக்காயும் பயந்துபோச்சாம்.
கத்தரிக்காய் ஓட்டம்!
‘‘இந்த மனுசங்க ரொம்ப மோசம்பா. நம்மள கொழம்புல தூக்கிப்போட்டு சாப்ட்ருவாங்க. அந்த விவசாயிக்கு நம்ம விதை வேணுமாம். நம்மளை காயப்போடுவாங்களாம். வாங்க, நாம மூணு பேரும் தப்பிச்சு ஓடிருவோம்''னு ஒரு கத்தரிக்காய் சொல்லவும், மத்த ரெண்டும் ‘சரி'னு சொல்லிச்சுங்களாம்.
அந்தச் செடியிலிருந்து கட் பண்ணிட்டு குதிச்சு, கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு ஓட்டம் பிடிச்சதுங்க.
வயல், ரோடு தாண்டி, காட்டுக்குள்ளே ஓடறப்போ, ஏதோ பெரிய கல் தடுக்க, மூணும் பறந்துபோய் விழுந்துச்சுங்களாம். திரும்பிப் பார்த்தா, அது கல் இல்லே... காட்டு ராஜா சிங்கம்.
‘‘யாருடா என் மேலே இடிச்சது?''ன்னு கோபத்தோடு கத்தரிக்காய்களைத் தொரத்துச்சாம் சிங்கம்.
‘‘ஆஹா.. மனுசங்ககிட்ட தப்பிக்க நெனைச்சு சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டோம்டா... ஸ்பீடா ஓடுங்க... இல்லே சட்னிதான்'னு ஓடுச்சுங்க.
சிங்கத்தைப் பார்த்துக்கிட்டே ஓடினதில், தூங்கிட்டிருந்த சிறுத்தையின் மூக்கு மேலே விழுந்துச்சுங்க.
‘ஹாச்ச்ச்சு'னு தும்மி முழிச்ச சிறுத்தையும் கத்தரிக்காய்களைத் துரத்த ஆரம்பிச்சது. ‘‘ஆஹா... நாம இன்னிக்கு நிஜமாவே சட்னிதான்'னு இன்னும் வேகமா ஓடின மூணு கத்தரிக்காய்களும் வழியில இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கிடுச்சுங்க.
‘‘அச்சோ... முடியலப்பா! மனுசங்ககிட்டேயிருந்து தப்பிக்க நினைச்சு, சிங்கம், சிறுத்தைனு சிக்கி, இப்போ பள்ளத்துல கெடக்கோமே... பேசாம தோட்டத்துக்கே போயிடலாம்டா... நேரத்துக்குத் தண்ணீ, வெயில், சாப்பாடுனு இருந்தோம். இப்படியே ஓடிட்டிருந்தா, ஒல்லிப்பிச்சானா மாறிடுவோம்'’னு ஒரு கத்தரிக்காய் சொல்லிச்சு.
‘‘சரி, நம்மளை தொரத்தின சிங்கமும் சிறுத்தையும் என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்'’னு வெளியே தலையை நீட்டிச்சு இன்னொரு கத்தரிக்காய்.
கத்தரிக்காய் ஓட்டம்!
சிங்கமும் சிறுத்தையும் கோபமா நின்னுட்டிருந்துச்சுங்க.
‘‘இப்போ மேலே போனா அவ்வளவுதான். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்ப்போம். ரெண்டும் அலுத்துப்போய் கிளம்பினதும் தோட்டத்துக்குப் போவோம்’’னு சொல்லிச்சு மூணாவது கத்தரிக்காய்.
அப்புறமென்ன... சிங்கமும் சிறுத்தையும் காத்திருந்து காத்திருந்து தூங்கினதும், மெதுவாக மேலே வந்துச்சுங்க.
மறுபடியும் காடு, ரோடு, வயல் என ஓடி தோட்டத்துக்கே வந்து சேர்ந்தப்போ, நடுராத்திரி ஆகிடுச்சாம்.
கத்தரிக்காய்களுக்கு ஒரே களைப்பு. தங்கள் செடியிடம் போய், ‘‘செடியே... செடியே... எங்களை மறுபடியும் உன்னோடு சேர்த்துக்க’’ன்னு கெஞ்சிக் கூத்தாடிப்பார்த்தாங்க....
‘‘என்ன விளையாடறீங்களா? நினைச்சா கிளம்பறதுக்கும் நினைச்சா ஒட்டிக்கிறதுக்கும் இது என்ன பொம்மை விளையாட்டா? இயற்கை விஷயம் கண்ணுங்களா. தோட்டக்காரர் வந்து தேவையான கத்தரிக்காய்களைப் பறிச்சுட்டுப் போய்ட்டார். இனி உங்களை என்னால ஒட்டவெச்சுக்க முடியாது ஸாரி''ன்னு சொல்லிடுச்சு செடி.
மூணு கத்தரிக்காய்களுக்கும் ரொம்ப வருத்தமாப் போச்சு. ‘என்ன செய்யறது?’ன்னு நைட் ஃபுல்லா அழுதுட்டே தூங்கிடுச்சுங்க.
மறுநாள்... ‘அவங்க அவங்களுக்குன்னு ஒரு கடமை இருக்குப்பா. அதுக்காகத்தான் இயற்கை படைக்குது. அதை நாம செஞ்சுதான் ஆகணும். விதையைக் கொடுக்க பயந்துதானே ஓடினீங்க. இப்படியே இருங்க. காய்ஞ்சு போய் மண்ணுக்குள்ளே போவீங்க. மறுபடியும் செடியா மொளைச்சு நீங்க மூணு பேரும் இன்னும் பல கத்தரிக்காய்களா மாறுவீங்க. பலருக்கும் உபயோகமா இருப்பீங்க’’ன்னு செடி சொல்லிச்சாம்.
அந்தக் கத்தரிக்காய்கள் அதே மாதிரி மண்ணுக்குள் புதைஞ்சுதுங்களாம். கொஞ்ச நாளில் அங்கே ஒரு செடி துளிர்க்க ஆரம்பிச்சது. அதன் ஒவ்வொரு இலையும் சந்தோஷமா சிரிக்க ஆரம்பிச்சது.
வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு
இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரத்தின் கட்டுமான பணி கிபி 1173 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1372 ல் முடிக்கப்பட்டது.கட்டுமானம் ஆரம்பிக்கும் போதே சிறிது சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. 185அடி உயரம் உள்ள பைசா கோபுரம் தற்போது சுமார்15 அடி சாய்வாக உள்ளது .
பாரம்பரிய விளையாட்டு - 5
குலையா குலையா முந்திரிக்காய் அல்லது குலை குலையா முந்திரிக்கா என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் கூடி விளையாடும் திளைப்பு விளையாட்டு. இதனை 'ஆனைத்திரி', 'திரி திரி பந்தம்' என்றும் பாடப்படும் பாடலுக்கேற்பப் பெயரிட்டு வழங்குவர். விளையாடுவோர் அனைவரும் வட்டமாக உட்காருவர். ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார். அப்போது அவர் பாடிக்கொண்டே வருவார். அமர்ந்திருப்போரில் ஒருவருக்குப் பின்னால் அவருக்குத் தெரியாமல் துணித்திரியை வைத்துவிட்டு மீண்டும் தன் கையில் துணி இருப்பது போல் பாவனை காட்டிக்கொண்டு பாடிக்கொண்டே வருவார்.
தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியவந்தால் அவர் அதனை எடுத்துக்கொண்டு திரி வைத்தவரைப் பின் தொடர்ந்து அவர் முதுகில் அந்தத் துணித்திரியால் அடித்துக்கொண்டே வருவார். அடிபடுபவர் துரத்தி அடிப்பவர் இடத்துக்கு வந்ததும் அவர் இடத்தில் தான் அமர்ந்துகொள்வார். பின் கையில் திரி உள்ளவர் பாடிவர ஆட்டம் தொடரும்.
தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியாமல் ஒருவர் அமர்ந்திருந்தால், ஒரு சுற்று வந்ததும் தான் வைத்த திரியை எடுத்து அவர் முதுகில் அடித்துக்கொண்டு துரத்துவார். அவர் அடி பட்டுக்கொண்டே ஒரு சுற்று வந்து தான் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொள்வார்.
இதுதான் விளையாட்டு. தந்திரமாக வைப்பது, அடிப்பது, அடி படுவது, மற்றவர் பார்த்து மகிழ்வது போன்ற திளைப்புகள் இந்த விளையாட்டில் உண்டு
பலன்
மன மகிழ்ச்சி, திறமை, தீங்கு இல்லாத பொழுது போக்கு என பல உண்டு.
இன்றைய செய்திகள்
02.08.2019
* தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு.
* சுற்றுச்சூழலைக் காக்க புதிய முயற்சி!: 12 மணி நேரத்தில் 353 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தது எத்தியோப்பியா.
* உலக அளவில், கல்விக்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் லண்டன் முதல் இடத்தையும், சென்னை 115வது இடத்தையும் பெற்றுள்ளன.
* தாய்லாந்து
பேட்மின்டன் தொடரின் மகளிர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளனர்.
* டெல்லியில் நடைபெற்று வரும் சர்தார் சாஜன் சிங் நினைவு மாஸ்டர்ஸ் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் கேரளாவின் எலிசபத் சூசன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
Today's Headlines
🌸The Cauvery Water Regulatory Tribunal has ordered Karnataka to open Cauvery water for the next 5 days.
🌸New effort to save the environment!: Ethiopia set a world record by planting 353 million saplings in 12 hours.
🌸 London tops the list of the best cities for education and Chennai 115th in worldwide
🌸India's Saina Nehwal and Kitambi Srikanth qualified for the women's and men's singles in 2nd round of the Thailand Badminton Series.
🌸 Elizabeth Susan of Kerala won gold medal in Sardar Sajan Singh Memorial Masters Shooting Championship women's 50m Rifle in 3rd stage in Delhi.
Prepared by
Covai women ICT_போதிமரம்