பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.08.19
திருக்குறள்
அதிகாரம்:புலான்மறுத்தல்
திருக்குறள்:256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
விளக்கம்:
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
பழமொழி
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
Even a trivial thing can serve an useful purpose
இரண்டொழுக்க பண்புகள்
1. நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளை தெரிந்து கொண்டு அவற்றை உண்டு என உடல்நலத்தை பாதுகாப்பேன்.
2. சுய சுத்தம், தலை முடி ஒழுங்காக வெட்டுதல் மற்றும் சரியான நேரத்திற்கு பள்ளி வருதல் போன்றவற்றை கடைபிடிப்பேன்.
பொன்மொழி
தன் இன்பத்திற்கு சுய தம்பட்டமும் , துன்பத்திற்கு பிறர்மீது சுமத்துபவரும் சிறந்த பண்பாளராக இருக்க முடியாது. அவரவர் வழி நட்பவரே ஆகச்சிறந்த பண்பாளர் ஆவார்.
--------- கார்டினல் நியூமன்
பொது அறிவு
1.பரிணாமக் கோட்பாட்டின் தந்தை யார்?
சார்லஸ் டார்வின்
2. அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
ஜான் டால்டன்
English words & meanings
Sea urchins - a marine animal with spines all over the body
கடல் முள்ளெலி - பெயருக்கு ஏற்ப உடல் முழுவதும் முள்ளாக இருக்கும்.
இவற்றிற்கு மூளையோ கண்களோ கிடையாது.
ஆரோக்ய வாழ்வு
செண்பகப்பூ - வாதத்தை குணப்படுத்தும், பார்வைத்திறனை மேம்படுத்தும்.
Some important abbreviations for students
approx. - approximately
temp. - temperature or temporary
நீதிக்கதை
அவர் ஒரு சமூக சேவகர். ஒரு நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரு சுரங்கபாதையை கடக்கும்போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, “உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்” என்று மிரட்டுகிறான்.
திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன் ஏஜ் வயது.
அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவனிடம் தனது பர்ஸை ஒப்படைக்கிறார் இவர். அவன் தப்பியோட முயற்சிக்கும் தருணம், அவனை கூப்பிடுகிறார்.
“தம்பி… ஒரு நிமிஷம்… நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியை காட்டி எல்லார்கிட்டேயும் பணம் பறிக்கிறதா இருந்தா இந்த கோட் உனக்கு தேவைப்படும். இதை போட்டுக்க. ஏன்னா… வெளியிலே ரொம்ப குளிரா இருக்கு!” கூறியவாறே தனது கோட்டை கழட்டுகிறார்.
திருடனுக்கு ஒரு கணம் குழப்பம். இவரை வித்தியாசமாக பார்த்தான்.
“நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?”
இவர் ஒரு படி மேலே போய் … “நீ பசியுடன் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உனக்கு ஒ.கே. என்றால் நாம் இருவரும் பக்கத்தில் ஏதாவது கடையில் டின்னர் சாப்பிடலாம்!!” என்றார்.
அவன் இன்னும் அவரை நம்பாமாலே பார்த்தான்.
“இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ ரிஸ்க் எடுத்து உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன். உனக்கு விருப்பம் இருந்தால் டின்னருக்கு வா…”
திருடனுக்கு மேலும் குழப்பம். அவர் வேறு ஏதாவது கத்தியோ ஆயுதமோ மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரை சோதனையிட்டான். அப்படி எதுவும் இல்லை.
அருகில் சாலையோரம் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறார்கள்.
மேனேஜர் முதல் வெயிட்டர் வரை அனைவரும் வந்து இவருக்கு விஷ் செய்கிறார்கள்.
“என்ன இது உங்களுக்கு இப்படி ராஜ மரியாதை தருகிறார்கள்? நீங்கள் தான் ஒருவேளை இந்த இடத்திற்கு சொந்தக்காரரோ?”
“இல்லை.. இல்லை… நான் அடிக்கடி இங்கு சாப்பிடுவது வழக்கம்…! எனவே எனக்கு அனைவரும் நல்ல அறிமுகம்!!”
“வெயிட்டரிடம் கூட பண்போடு நடந்துகொள்கிறீர்களே…?”
“நாம் எல்லோரிடமும் பண்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று உனக்கு பள்ளியில் சொல்லித் தரவில்லையா?”
“தந்தார்கள். ஆனால்… அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று நினைத்தேன்!”
சாப்பிட்டு முடிக்கும்போது, அவனிடம், “என்னிடம் கொடுக்க பணம் இல்லை. பர்ஸ் தான் உன்னிடம் இருக்கிறதே. பர்சை திருப்பித் தந்தால் சாப்பிட்டதற்கு பணத்தை செலுத்திவிடுகிறேன். உன்னையும் கண்ணியமாக நடத்துவேன்” என்றார்.
நியாயமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு திருடன் பர்ஸுடன் ஓட்டம் பிடித்திருக்கவேண்டும். ஆனால் அவன் ஓடவில்லை. மாறாக அந்த பர்ஸை அவரிடமே திருப்பித் தந்தான்.
அடுத்து இவர் என்ன செய்தார் தெரியுமா? “உனக்கு ஒ.கே. என்றால் இந்த கத்தியை நான் வாங்க விரும்புறேன்” என்று கூறி இருவர் சாப்பிட்டதற்கும் பணத்தை தந்ததோடல்லாமல் அந்த கத்தியை திருடனிடம் ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டார்.
ஒரு திருடனை மாற்றியது போலவும் ஆச்சு. தன்னையும் காத்துக்கொண்டு தன் பொருளையும் காப்பாற்றிக்கொண்டது போலவும் ஆச்சு.
வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். “மகனே… டயம் கேட்டா நீ வாட்ச்சையே கழட்டிக் கொடுக்குற ஆள்… நீ இப்படி நடந்துகிட்டதலயும் அவன் பதிலுக்கு அப்படி நடந்துகிட்டதலயும் எந்த ஆச்சரியமும் இல்லை!” என்றார்.
WORLD IS A MIRROR. நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியே தான் அவர்களும் நம்மை நடத்துவார்கள்.
கதையில வேணும்னா இதெல்லாம் படிக்க நல்லாயிருக்கும் இருக்கும். நிஜத்துல இதெல்லாம் சாத்தியமா? – இது தானே உங்க கேள்வி…! (அதானே… நாமெல்லாம் யாரு?!)
இது கதையல்ல…! சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம்!!! அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்தி பெரிதும் பேசப்பட்டது!!
குறிப்பு :
ஜூலியோ டயஸுக்கு சாத்தியப்பட்ட இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா……..? படும்! படும்!!
* எதையும் பாஸிட்டிவ்வாக பார்ப்பவர்களுக்கு!
* எந்த சூழலிலும் இன்சொல்லே பேசுபவர்களுக்கு!!
* இடியே விழுந்தாலும் நிலைகுலையாத மனப்பக்குவம் இருப்பவர்களுக்கு!!!
* தன்னைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசிப்பவர்களுக்கு!!!!
நம்பிக்கையும் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். இந்த பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்… அட….நீங்கள் விரும்புவது தான் சார்… நடக்கும் !!
வியாழன்
அறிவியல்&கணினி
Magic magic - மாய அட்டை
அறிவியல் செயல்பாட்டைக் காண இங்கே கிளிக் செய்யவும்
ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி, அதன் மீது ஒரு காகித அட்டையை வைத்து அழுத்தி மூடவும். பிறகு, குவளையைக் கவனமாகத் தலைகீழாகத் திருப்பவும். திருப்பியதும் அட்டையில் இருந்து கையை எடுக்கவும். குவளையின் நீர் கீழ்நோக்கி இருந்தாலும் அட்டை கீழே விழாது.
காரணம்
காற்றின் மேல்நோக்கிய அழுத்தம் அட்டை கீழே விழாமல் தடுத்து விடும்.
கணினி சூழ் உலகு
www.English club.com
Lessons, activities, games, quizzes and lot more contents for English is here. This is also introduced in 7th std English book (page no. 137)
இன்றைய செய்திகள்
08.08.2019
* தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
* கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள்; அகலமான செங்கல் சுவர் கட்டிடம் கண்டுபிடிப்பு.
* கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
* ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
Today's Headlines
🌸The water level of the dam is rising due to heavy rains in Tamil Nadu.
🌸Foreign accesories were found in kizhadi Excavations and Wide brick wall building was also discovered
🌸 Red alert has been issued due to heavy rains in Kerala.
🌸India won the third and final T20 match between India and West Indies by 7 wickets.
🌸 In the women's singles first round of the Roger's Cup, Tennis star Maria Sharapova was deafeted .
Prepared by
Covai women ICT_போதிமரம்