பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.08.19

திருக்குறள்


அதிகாரம்:புலான்மறுத்தல்

திருக்குறள்:259


அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

விளக்கம்:

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் உடம்பை உண்ணாமலிருப்பது நல்லது.


பழமொழி

 தீராக் கோபம் போராய் முடியும்.

Anger is a sworn enemy.

இரண்டொழுக்க பண்புகள்

1. நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் குறித்து அறிந்து கொள்ள முயல்வேன்.

2.அவர்களின் தியாகம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை போலவே நானும் வாழ முயற்சி செய்வேன்.

பொன்மொழி

* உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை.
- வோல்டன்.

பொது அறிவு

• இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை ?
 பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான்,
சீனா,வங்காளதேசம், மியான்மார்.

* இந்தியானவயும் இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்தி எது?

பாக் நீர்ச்சந்தி

English words & meanings

Urge: a strong  desire to do something. தூண்டுதல்

Unique : something special. Nothing like others doing or having.
தனித் தன்மையுடைய.


ஆரோக்ய வாழ்வு

நாவல் பழத்தில்  கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்புச்சத்து  மற்றும் விட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன .

Some important  abbreviations for students

TDS. -  Tax Deduction at Source

TRAI.  -   Telecom Regulatory Authority of India

நீதிக்கதை

ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.

அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.

""""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.

""""நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.

""""பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.

துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.

புதன்
கணிதம் & கையெழுத்துப்பயிற்சி

மாயப் பெட்டி

ஒரு நீல நிறப்  பெட்டியில் சில முத்துகள் இருந்தன.

 அவற்றை பச்சைப் பெட்டியில் போட்டால் இரட்டிப்பாகும் .

மஞ்சள் பெட்டியில் போட்டால் மும்மடங்காகும்.

பச்சைப் பெட்டியில் முத்துகள் முழுவதையும் போடவேண்டும் .

மஞ்சள் பெட்டியில் மூன்றில் இரண்டு பங்கு மட்டும் போட வேண்டும் ..

 தற்போது பச்சை மற்றும் மஞ்சள் இரண்டு பெட்டிகளிலும் ஒரே அளவு முத்துகள் உள்ளன.

அதாவது 18 முத்துகள்...

கேள்வி: நீலப் பெட்டியில் இருந்த முத்துகள் எத்தனை.?

விடை:
பச்சைப் பெட்டி
18/2  =  9 முத்துகள்

மஞ்சள் பெட்டி
18/3 = 6 முத்துகள்

[(3+3)+3= 9]
எனவே நீலப் பெட்டியில் 9 முத்துகள் இருந்தன.

கையெழுத்துப் பயிற்சி - 10






இன்றைய செய்திகள்

14.08.2019

* கேரளாவுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை; இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

* நாட்டிலேயே முதன்முறையாக குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

* கல்லூரிப் படிப்புடன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் வருகிற 7-ந்தேதி முதல்  சென்னையில் தொடங்குகிறது‘, என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ச.வீரபாபு தெரிவித்தார்.

* கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

* ஸ்பெயினில் நடந்த 'கோடிப்' கோப்பை கால்பந்து தொடரில் 3வது இடம் பிடித்த இந்திய பெண்கள் அணிக்கு சிறப்பு கோப்பை வழங்கப்பட்டது.


Today's Headlines

🌸Red alert  back to Kerala;  Heavy rainfall is reported in Idukki, Ernakulam and Alappuzha districts.

 🌸For the first time in the country, the Government of Tamil Nadu has implemented a free vaccination program for under weight children.

 🌸IAS Academy director C. Veerababu said that IAS exam coaching along with college education  will be conducted  from 7th  in Chennai .

 🌸Spanish star Rafael Nadal won the men's singles final of the Rogers Cup tennis series in Canada and Canada's Bianca Andreascu won the women's singles final.

 🌸The Special Cup was awarded 3rd place to the  Indian women's team in the "Codip Cup football" series in Spain.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank