பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.08.19



திருக்குறள்


அதிகாரம்:தவம்

திருக்குறள்:264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

விளக்கம்:

மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.

பழமொழி

Belief is relief.

நம்பினோர் கைவிடப்படார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவேன்.

2. என் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் அவ்வாறே செய்ய ஊக்கவிப்பேன்.

பொன்மொழி

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும்.
- விவேகானந்தர்

பொது அறிவு

* எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?

கோலாலம்பூர் (மலேஷியா)

* முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள்
மொழிபெயர்க்கப்பட்டது?

வீரமாமுனிவர்
லத்தீன் மொழி

English words & meanings

X-ray tetra - a fresh water fish found in South America




எக்ஸ்ரே மீன் - நன்னீரில் வாழும் ஒரு மீன் இனம்.
இதன் உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் எக்ஸ்ரே கதிர்களால் படம் எடுத்தது போல தெளிவாக தெரியும் எனவே இந்த பெயர்.

ஆரோக்ய வாழ்வு

புதினா கீரை அசைவ உணவு மற்றும் கொழுப்புப் பொருள்களை எளிதில் செரிக்க வைக்கிறது .இரத்தத்தை சுத்தமாக்கும் .வாய் துர்நாற்றத்தை அகற்றும்.பசியைத் தூண்டும் .

Some important abbreviations for students

RM - Railway Mail Service 

ROB - Road Over-bridge

நீதிக்கதை

தானத்தில் சிறந்தவன் கர்ணன்

பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லோரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் தங்கமலை, வெள்ளிமலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத்தர, தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப்பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா! என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டார் தருமர்.

உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா! இதோபார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்கமலை. மற்றொன்று வெள்ளிமலை. இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப்பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? என்று கேட்டார். உடனே கர்ணன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இப்போதே செய்து காட்டுகிறேன் என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது தர்மத்தை முடித்துவிட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப்பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக்காட்டிலும் தான, தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதால் தானத்தில் சிறந்தவர் கர்ணனே என்று பாண்டவர்களுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன்.

செவ்வாய்

English & ART

What am I?

I am usually green and brown.
I can live for a long time.
I'm a house for a bird.
Kids love to climb on me.
I need rain.

🌲

Pronoun errors

Incorrect: Everybody must bring their own lunch.

Correct: Everybody must bring his or her own lunch.

ART - 35

இன்றைய செய்திகள்

20.08.2019

* இந்திய வானிலை மையம் உத்தர்கண்ட், ஒடிசா மற்றும் தமிழ் நாட்டில் பலத்த மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

* ஹரியானாவில் 8 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டதன் விளைவாக டெல்லி யமுனா நதியில் வேகமாக நீர் ஏறி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தல்.

* செப்டம்பர் 7ல் நிலவில் இறங்கு முன்பாக சந்திராயன் 2 ஆகஸ்ட் 20 ல் நிலவின் சுற்று பாதையில் நுழையும் என இஸ்ரோ தலைவர் திரு. K. சிவன் கூறியுள்ளார்.

* பவானிசாகர் அணை, இன்று, 65வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அடுத்த பெரிய அணை மற்றும் தென் மாநிலங்களில், மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு உண்டு.அணையின் மொத்த உயரம், 105 அடி. 32.8 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். அணையின் முழு நீர்தேக்கப் பரப்பு, 30 சதுர மைல்.

* அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட்சோவாவுடன் உள்ளூர் வீராங்கனை மேடிசன் கீஸ் ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர்.

* செக் குடியரசில் நடைப்பெற்று வரும் மிட்னிக் ரெய்டர் தடகள போட்டியில் பெண்களுக்கான 300 மீ., ஓட்டத்தில், இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடத்துடன் தங்கம் வென்றார்.

Today's Headlines

🌸 The Indian Meteorological Department has announced heavy rains in Uttarakhand, Odisha and Tamil Nadu.

🌸 Delhi's Yamuna River is rapidly flooding as a result of the opening of 8 lakh cubic feet of water in Haryana. Thus urging people living in low-lying areas to move to safer places.

🌸ISRO leader Mr k.Sivan said that the chandraayan will enter the orbit of the moon on August 20, before landing on the moon on September 7.

🌸The Bhawanisagar Dam is steping its 65th year today. Bhavanisagar,in erode district boasts the largest soil dam and next largest dam to Mettur dam The total height of the dam is 105 feet. 32.8 tmc, water can be stagnant. The entire catchment area of ​​the dam, 30 square miles.

🌸 Madison Keys qualifies for the local championship with Russia's Svetlana Kasnatsova in the women's singles final of the Cincinnati Open tennis tournament in the United States.

🌸Hima Das of India won the gold medal in the 300m women's Midnik Raider Athletics Championship in the Czech Republic.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)