பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.08.19

திருக்குறள்


அதிகாரம்:தவம்


திருக்குறள்:265

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

விளக்கம்:

தவத்தினால் விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

பழமொழி

 If you beat spice,It will smell the sweeter.

 சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவேன்.

2. என் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் அவ்வாறே செய்ய ஊக்கவிப்பேன்.

பொன்மொழி

உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக
சேவைதான் செய்ய முடியும்.
                                      - விவேகானந்தர்

பொது அறிவு

* கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு
அழைக கப்படுகிறது ?

 தோஆப்

* பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு?

 கோசி ஆறு

English words & meanings

Yellow Bell - golden trumpet flower.



மஞ்சள் நிற எக்காள மலர் குளம்பி என்றும் பெயர் உண்டு.
அழகுக்காக வளர்க்க படும் இதன் பிறப்பிடம் பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா. இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

ஆரோக்ய வாழ்வு

புதினாக் கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசை வலி ,நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும் .புதினாக் கீரை ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்துகிறது .

Some important  abbreviations for students

HP - Himachal Pradesh 

JK - Jammu and Kashmir

நீதிக்கதை

எல்லாம் நன்மைக்கே

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.

வழக்கம்போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே! அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான்.

அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான்.

அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.

நீதி :
எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டும்.

புதன்

கணிதம் & கையெழுத்து

மந்திரக் கோல்

ஒரு மந்திரவாதி
என்னிடம் மூன்று குச்சிகளைக் கொடுத்தார்...
1.முதல் குச்சி  4 அங்குலம் நீளமுடையது. 2. இரண்டாவது குச்சி 8 அங்குலம் நீளமுடையது. 3. மூன்றாவது குச்சி 12 அங்குலம் நீளமுடையது.

ஆனால் நான் அவரை சோதிப்பதற்காக....

 இவற்றை ஒரே நீள அளவுள்ள குச்சிகளாக மாற்றித்தர வேண்டும் என  நான் கேட்டுக் கொண்டதால் மந்திரவாதியும் உடனடியாக மாற்றிவிட்டார் .

கேள்வி : இப்போது என்னிடம் உள்ள குச்சிகளின் நீளம் என்னவாக இருக்கும் ?

விடை:
(4+8+12)/3 =24/3 = 8
8 அங்குலம்.

கையெழுத்துப்பயிற்சி-11




செய்திகள்

21.08.2019

*சந்திராயன் 2 வெற்றிகரமாக நிலவின் சுற்று பாதையில் நுழைந்தது. நிலவிறங்க சில நாட்களே உள்ளன.

*புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 60வயதை கடந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் இதற்கு  தகுதியுடையவர்கள் ஆவர்.

* இவ்வளவு நாட்களும் மர்மமாக இருந்த பறவைகளின் வலசை போகும் விதம் தற்போது செயற்கை துணைக் கோள் கண்காணிப்பு கருவி மூலம் அறியப்பட்டு உள்ளது.

* உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர் எச்எஸ் பிரனாய் இரண்டு முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற லின் டானை வீழ்த்தி அசத்தினார்.

* டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.

Today's Headlines

🌸Now that Chandrayaan-2 has completed its trek to Moon, it is just days away from Moon landing.

🌸 Chief Minister Edappadi Palanisamy has announced a pension scheme for 5 lakh seniors.  Both male and female who are  over 60 years of age without any body to support them are eligible.

 🌸The epic seasonal voyages of migratory birds have long confounded scientists – now satellite tracking technology is revealing precisely how they do it.

 🌸 World championships badminton player  H s Prannoy beat Lynn Tan who was a two-time Olympic medalist.

 🌸 India beat Japan in the qualifying round for the Olympic Games in Tokyo.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)