கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!

சிபிஎஸ்சி நடத்தும் டிசம்பர் மாதத்திற்கான சிடெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2019
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 23.09.2019, மதியம் 3.30 மணிக்குள்
தேர்வு நடைபெறும் தேதி: 
முதல் தாளுக்கான தேர்வு - 08.12.2019, காலை 09.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
இரண்டாம் தாளுக்கான தேர்வு - 08.12.2019, மதியம் 02.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை


விண்ணப்பக் கட்டணம்:

1. முதல் தாள் அல்லது இரண்டாம் தாள்:(ஏதேனும் ஒன்றிற்கு மட்டும்)
i) பொது / ஓபிசி (NCL) பிரிவினர் - ரூ.700
ii) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.350


2. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்:(இரண்டிற்கும்)
i) பொது / ஓபிசி (NCL) பிரிவினர் - ரூ.1200
ii) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.600


கல்வித்தகுதி:

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், சீனியர் செகன்டரி (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எஜுகேசன் (அல்லது) 4-வருட பேச்சுலர் ஆப் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், பட்டப்படிப்புடன் கூடிய 2-வருட டிப்ளமோ இன் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய 1-வருட பேச்சுலர் இன் எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


கல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக் கொண்டிருப்பவர்களும் இந்தத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://ctet.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.


தேர்வு முறை:

அனைத்து வினாக்களும் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.
இரண்டு பேப்பர்களுக்கு சிடெட் தேர்வு நடைபெறும். அதில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மட்டும் எழுதினால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-2 மட்டும் எழுதினால் போதுமானது. இரண்டிலும் பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டையும் எழுத வேண்டும்.
பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டிலுமே 150 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.
மேலும் இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://ctet.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=162&iii=Y - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)