Today School Morning Prayer Activities 04.09.19
Today School Morning Prayer Activities 04.09.19
திருக்குறள்
திருக்குறள்
அதிகாரம்:கூடாவொழுக்கம்
திருக்குறள்:272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
விளக்கம்:
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
பழமொழி
An evil deed has a witness in the bosom.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.
2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.
பொன்மொழி
தவறுகள் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் பண்பு நேர்மையாளர் என்ற பட்டத்தைத் தரலாம். ஆனால் இடம் பொருள் ஏவல் பார்த்து கேட்போர் பண்பாளர் ஆகிறார்..
---- சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு
1. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப் படுபவர் யார்?
சமுத்திர குப்தர்
2. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது?
"காளை அடக்குதல்"
English words & meanings
Habitat - the natural home for animals and plants
விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழும் இயற்கை வசிப்பிடம்
Hatch - the production of young from an egg. குஞ்சு பொரித்தல்
ஆரோக்ய வாழ்வு
வெந்தயம் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி,குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது .
Some important abbreviations for students
IP - Industry program
LLW - Low level waste
நீதிக்கதை
நேர்மையான பிச்சைக்காரர்
ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான்.
நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன்.
அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர்.
அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து, மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.
புதன்
கணக்கு & கையெழுத்து
சமப்படுத்துதல்
IIII
IIII
IIII
மேலே உள்ள படத்தில் 3 வரிசையில் 4 குச்சிகள் உள்ளன. இவற்றில் 3 குச்சிகளை இடம் மாற்றினால் 3 வரிசையிலும் சமமான குச்சிகள் இருக்கும்....
மேலும் அவற்றின் சமதளமும் சரிசெய்ய வேண்டும்.
கேள்வி:
எப்படி??
எந்தெந்த குச்சிகள்??
விடை:
1) முதல் வரிசை குச்சிகளை எடுக்கவேண்டும் .
.III
.III
.III
2) ஒவ்வொரு வரிசையிலும் கீழ் உள்ளவாறு அமைக்க வேண்டும்.
. I I +
. I + I
. + I I
கையெழுத்துப் பயிற்சி - 13
இன்றைய செய்திகள்
04.09.2019
☘சந்திரயான் -2: விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப் பாதை உயரம் மேலும் குறைப்பு.
☘நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை தொடர்ந்து பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
☘உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட சிறப்பு மென்பொருள் உருவாக்கும் பணி நடந்து கொண்டு இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
☘இந்தியா ரஷ்யா இடையே கடல் போக்குவரத்து மும்பை வழியாக செல்வதற்கு பதிலாக சென்னை வழியாக ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டு வருகிறது.
☘ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளது.
☘ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்.
Today's Headlines
🌸Chandrayaan-2 : Lander VIKRAM'S orbital height reduced further.
🌸In the continuation of Plastic banning in Nilgris public spitting also banned. Rs. 1,000 fine for spitting in the public. This got everyone's appreciation.
🌸The verdicts for High Court will be in Tamil in future for that the software is under development work said TN Law Minister.
🌸The maritime route between Russia and India may start from Chennai instead of from Bombay. In this the distance is only 5,600 nautical miles which will reduce the transport cost also.
🌸In one day cricket match ranking India sustains it's number one place.
🌸In ICC test bat's man ranking Virat Kohli was pushed back by Steve Smith and lost his first place.
Prepared by
Covai women ICT_போதிமரம்