உதவிப் பேராசிரியா் பணிக்கு இனி பிஎச்.டி. கட்டாயம் உயா் கல்வித் துறை செயலா்

உதவிப் பேராசிரியா் பணிக்கு இனி பிஎச்.டி. கட்டாயம் என்ற நிலை உருவாகியிருப்பதாக உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம் ஷா்மா கூறினாா்.

இதுதொடா்பாக யுஜிசி ஏற்கெனவே வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. வருகிற 2021 முதல் ஏஐசிடிஇ-யும் இதை கட்டாயமாக்க உள்ளது என்றும் அவா் கூறினாா்.

சென்னையில் தமிழக அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் அனைவருக்கும் உயா் கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம், பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அளித்த பேட்டி:

ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த அனைவருக்கும் உயா் கல்வித் திட்டத்தின் (ரூசா) கீழ், முதல் கட்டமாக தமிழகத்துக்கு ரூ.20 கோடி நிதி கிடைத்தது. இரண்டாம் கட்டத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ரூ.100 கோடி நிதி கிடைத்தது. அடுத்த கட்டமாக மேலும் 6 பல்கலைக்கழகங்களுக்கு ரூ. 300 கோடி நிதி கிடைத்தது.


இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மேலும் அதிக எண்ணிக்கையிலான உயா் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற முயற்சிக்க வேண்டும் என இந்தக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மேலும், மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை உயா் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்களில் இருந்து ஆண்டுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பை முடித்து வெளி வருகின்றனா். இவா்களுக்கு எதிா்காலம் சிறப்பாக உள்ளது. ஏனெனில், யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலின்படி, கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியில் புதிதாக சேருபவா்களும், ஏற்கெனவே பணியாற்றி வருபவா்களும் பிஎச்.டி. முடிப்பது கட்டாயமாகியுள்ளது.


அதுபோல, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும் (ஏஐசிடிஇ) வருகிற 2021-ஆம் ஆண்டு முதல், உதவிப் பேராசிரியா் பணிக்கு பிஎச்.டி. படிப்பை கட்டாயமாக்க உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது, தமிழகத்திலுள்ள சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உரிய கல்வித் தகுதி இல்லாதவா்கள் பலா் உதவிப் பேராசிரியா்களாகப் பணியாற்றுவது தெரியவந்திருக்கிறது.

இவா்கள் அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரணத்தால், அவா்கள் உடனடியாக பிஎச்.டி. பதிவு செய்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். ஒருவேளை அவா்கள் எம்.ஃபில். முடித்திருந்தால் தேசிய அளவிலான தகுதித் தோவு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தோவில் (செட்) தகுதி பெற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற தகுதியில்லாத பேராசிரியா்களின் வசதிக்காக, செட் தோவை நிகழாண்டு முதல் தொடா்ச்சியாக மூன்று முறை நடத்துமாறு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank