புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி.,

புதுடில்லி,:புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது. தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்ட
ங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. 14 ஆண்டுஇந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், ருஷிகேஷ் சேனாபதி, டில்லியில் கூறியதாவது:

தேசிய அளவில், பள்ளி பாடத் திட்டங்களை, 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளில், என்.சி.இ.ஆர்.டி., மாற்றியமைத்துள்ளது.கடந்த, 14 ஆண்டுகளாக அமலில் உள்ள, பள்ளி பாடத் திட்டத்தை, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இம்மாத இறுதியில், ஆய்வு கமிட்டி அறிவிக்கப்படும். ஆய்வு கமிட்டிபுதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன். ஆய்வு கமிட்டி, தேசிய அளவில் பள்ளி பாடத் திட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி, ஆய்வு செய்து முடிவெடுக்கும். என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தங்களையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை சுமையாக கருதாமல், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கும் வகையில், பாடத் திட்டங்கள் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். பள்ளிகளில் நீர் மேலாண்மை'பள்ளிகளில் நீர் மேலாண்மையை செயல்படுத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.டில்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உட்பட, நாட்டில், 21 நகரங்களில், நிலத்தடி நீர் வற்றி விடும் அபாயம் உள்ளது என, 'நிடி ஆயோக்' எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் சி.பி.எஸ்.இ., கூறியிருப்பதாவது:பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பழைய சாதனங்களை நீக்கி, நீரை சேமிக்கும் வகையில், புதிய கருவிகளை பயன்படுத்த வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில், சி.பி..எஸ்.இ., பள்ளிகள் அனைத்திலும், நீர் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank