பள்ளிக்கல்வித்துறை புதிய ஆணையர் பணிகள் என்ன?

பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் க
ல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர்.

இதற்கிடையே பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப் படுகின்றன.
IMG-20191115-WA0004



அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க தற்போது புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வயது வந்தோர் மற்றும் முறைசாரா கல்வி என பள்ளிக்கல்வியின்கீழ் 10 இயக்கு நரகங்கள் செயல்படுகின்றன.



இந்த துறைகளைச் சேர்ந்த இயக்குநர்களின் செயல்பாடு களைக் கண்காணித்து நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன. இதுதவிர புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலாக உள்ளதால் அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து சிரமங்களைத் தவிர்க்க, துறை செயலரின் அறிவுறுத்தலின்படி புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது.



இனி பள்ளிக்கல்வி யின் அனைத்துத் துறைகளின் இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படு வார்கள். இவருக்கான அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஒதுக்கப்பட உள்ளது. இயக்குநர்கள் மாதம் தோறும் தங்கள் துறை சார்ந்த பணிவிவர அறிக்கையை ஆணை யரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் களுக்கான அதிகாரம் மற்றும் பணி வரம்புகளும் மறுவரையறை செய் யப்பட உள்ளன. விரைவில் அறி விப்பு வெளியாகும்’’ என்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)