Today School Morning Prayer Activities 18-11-2019

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
18-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இன்றைய திருக்குறள்
குறள்எண்- 805
அதிகாரம் : பழைமை


பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
 நோதக்க நட்டார் செயின்.

மு.வ உரை:

வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

கருணாநிதி  உரை:

வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் சிறப்பான எண்ணங்களை கொண்ட நல்ல ஆசிரியர்களே துணையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அறிவாற்றலைப் பெருக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.
- அப்துல் கலாம்


✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்:
ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1. Again - மீண்டும்
2. Animal - விலங்கு
3. Point - புள்ளி








✍✍✍✍✍✍✍

பொதுஅறிவு

1. குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ?

 பிட்யூட்டரி சுரப்பி

2. வேதிப் பொருள்களின் அரசன் யார் ?

 கந்தக அமிலம்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம்- அது என்ன ?

 வலையல்

2. அறிவின் மறுபெயர் , இரவில் வருவாள் - அது என்ன ?

 மதி


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

புளிச்சக்கீரை

🍁 புளிச்சக்கீரை புளிப்புச்சுவை மிகுந்த கீரை வகைகளில் ஒன்று.

🍁 புளிச்சக்கீரையில் வெள்ளைப்பூ புளிச்சை மற்றும் சிவப்புபூ புளிச்சை என இரு வகை உள்ளது.

🍁 சிவப்புபூ புளிச்சைகீரையானது, வெள்ளைப்பூ புளிச்சைக்கீரையை விட புளிப்பு சற்று அதிகமாக  இருக்கும்.

🍁வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளில் நன்கு வளரும் இயல்பை உடையது.

🍁இக்கீரை ஆந்திராவில் கோங்குரா என்ற பெயரில் பிரசித்து பெற்றது.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அடக்க முடியாத கோபம்


ஒரு ஜென் குருவின் மாணவன் ஒருமுறை அவரிடம் வந்து குருவே, எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது. இதை எப்படி குணப்படுத்துவது? என்று கேட்டான்.

அப்படியெனில் ஏதோ ஒன்று உன்னை பயங்கரமாக ஆட்டி வைக்கிறது. சரி, இப்பொழுது அந்த அடக்க முடியாத கோபத்தை காட்டு என்றார். அதற்கு மாணவன் அதை இப்பொழுதெல்லாம் காட்ட முடியாது என்றான். வேறு எப்பொழுது காட்ட முடியும்? என்று குரு கேட்டார்.

அதற்கு அவன் அது எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது என்றான். அப்போது குருஅப்படியென்றால் அது உன்னுடைய சொந்த இயல்பாக இருக்க முடியாது. அவ்வாறு உனக்கு சொந்தமானதாக இருந்தால், நீ எந்த நேரத்திலும் எனக்கு அதை காண்பித்திருப்பாய். உனக்கு சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்துள்ளாய் என்று யோசித்து பார். பின் உனக்கே புரியும் என்று சொன்னார்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை(18-11-2019) பதவியேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே


🔮இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

🔮தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி நடைபெறும்.

🔮டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியுடன் ரோஜர் பெடரர் வெளியேறினார்.

🔮முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

🔮கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.

HEADLINES

🔮74% parents in Delhi-NCR want annual scheduled ‘smog break’ in schools: Survey


🔮Biggest-ever Indian squad look to end on high in World Cup Finals

🔮Chennai Metro rail timings now displayed at airport .

🔮Gotabaya Rajapaksa wins Sri Lankan presidential election: Official results.


🔮Rajnath Singh holds talks with U.S. Defence Secretary with focus on Indo-Pacific

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)