Today School Morning Prayer Activities

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03-12-2019
திருக்குறள்





அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

பழமொழி

A single swallow can not make a summer

தனி மரம் தோப்பாகாது.

இரண்டொழுக்க பண்புகள்

 1. காலம் பொன் போன்றது. எனவே என் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன்.

2. கடமை கண் போன்றது எனவேஎனது படிப்பிலும் என் கடமைகளை முடிப்பதிலும் கவனம் செலுத்துவேன்.

பொன்மொழி

அச்சம் என்பது அறியாமையால் உருவாகிறது.
அறியாமையை அகற்ற கல்வி ஆட்கொள்ள வேண்டும்....

            ----- எமர்சன்



பொது அறிவு

1. தெற்கு பிரிட்டன் என்று அழைக்கப்படும் நாடு எது?

நியுசிலாந்து

2. ஐந்து கடல்களின் நாடு  என்று அழைக்கப்படும் நாடு எது?

எகிப்து

English words & meanings

Uranology – study of the heavens; astronomy. அண்டவியல். அண்டத்தின் தோற்றம், இயக்கம், கட்டமைப்பு,  ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல்.

Udometric -மழைமானி சார்ந்த

ஆரோக்ய வாழ்வு

 உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டுமானால் பப்பாளிப் பழத்தை அதிகம் உண்ண வேண்டும்.

Some important  abbreviations for students

ESL - English as a second language.

EFL - English as a foreign language

நீதிக்கதை

கல்வியின் பெருமை

பண்ணையார் ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார் ஆசிரியர்.

ஆ! இருநூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார் பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார்.



ஆசிரியரான உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்? மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால் ஐம்பத்து இரண்டு ஆகும்.

என் மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன் மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் ஆசிரியர்.

என்னை மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள் கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார் ஆசிரியர்.

நீதி :
மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.

செவ்வாய்
ஆங்கிலம்

The R-Controlled Vowel Sounds

An r-controlled vowel is a vowel whose sound is influenced by the r that comes before it. The three r-controlled vowel sounds are ar, er, and or.

ar: bark and dark

er: her, bird, and fur

or: fork, pork, and stork

இன்றைய செய்திகள்



03.12.19

* தமிழக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியீடு . ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

* இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக சப் லெப்டினன்ட் ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் இன்று பொறுப்பேற்றார்.

* சென்னையில் கனமழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



* குஜராத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

* பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 2 - வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

Today's Headlines

🌸Tamil Nadu Local bodies election tables are released. Elections will be held on 27th and 30th. For Town Panchayat the dates are not yet announced.

🌸 For the Indian Navy a first woman pilot Sub Lt.Shivangi took office today at Cochin Navy Yard.

🌸 Due to heavy rain in Chengalpattu there is a flood warning for 10 villages.



🌸 In the Seyed Mushtak Ali Cricket Match at Gujarat the Karnataka team won the match against Tamil Nadu in a tough competition.

🌸 In the test match against Pakistan Australia won the match by 2-0 thus by climped the lists of the championship to second place.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)