Today School Morning Prayer Activities - 05.12.19
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.12.19
திருக்குறள்
_கயமை_
_குறள் எண் 1078_
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.
பழமொழி
Discretion is better than valour
விவேகம் வீரத்தினும் சிறப்பு
இரண்டொழுக்க பண்புகள்
1. காலம் பொன் போன்றது. எனவே என் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன்.
2. கடமை கண் போன்றது எனவேஎனது படிப்பிலும் என் கடமைகளை முடிப்பதிலும் கவனம் செலுத்துவேன்.
பொன்மொழி
அறிவில்லாத ஆர்வம் இருளில் பயணம் செய்வது போலாகும்.
-----ஜான் நியூட்டன்
பொது அறிவு
1. துணைக் கோள் இல்லாத கோள்கள் எவை?
புதன் மற்றும் வெள்ளி
2. நெப்டியூனில் வீசும் காற்றின் வேகம் என்ன?
ஒரு மணி நேரத்திற்கு 1,770 கி. மீ
English words & meanings
Warm-blooded - animals having temperature that won't change with surrounding temperature. வெப்ப இரத்த பிராணிகள்.
Wafer -a very thin, dry biscuit. மிக மெலிதான உலர்ந்த பிஸ்கோத்து.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளியில் குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுவதோடு உடல் எடையைக் குறைப்பதற்கும் பேருதவியாக உள்ளது.
Some important abbreviations for students
CC - Carbon copy
BCC - Blind carbon copy
நீதிக்கதை
சிங்கத்தின் வீரம்
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.
இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது.
ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.
இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.
இன்றைய செய்திகள்
05.12.19
* ஸ்காட்லாந்து நாட்டில் ஹாரிஸ் தீவில் 20 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கிடந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் வயிற்றில் இருந்த 100 கிலோ நெகிழி குப்பைகள் என தெரிய வந்துள்ளது.
* சிலிண்டர் வெடித்து தீ விபத்து! - சூடான் செராமிக் ஆலையில் தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் பலி.
* எட்டு வழி பசுமைச் சாலைத் திட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
* தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் உள்பட 40 பதக்கங்களை வென்றது இந்தியா.
* நேபாளத்தில் நடந்து வரும் தெற்காசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
Today's Headlines
🌸In Haris Island at Scotland they found a 20 ton dead whale. Reason is they found 100 kg plastics in it's stomach. Awareness is much needed for the protection of marine lives.
🌸 In Sudan Ceramic factory there is a cylinder blast leads to death of 18 Indians including few Tamilian.
🌸 In connection with the eight way green road there will be a hearing in Supreme Court tomorrow
🌸 In South Asian meet India bagged 15 gold, 16 silver 9 bronze and as a total won 40 medals.
🌸In the South Asian competitions held at Nepal Indian Player Mehuli Gosh won the gold medal with the record in the 10 metre air rifle competition and made an impression.
Prepared by
Covai women ICT__போதிமரம்