அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பின் அடிப்படையிலேயே பொதுத் தேர்வு
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பின் அடிப்படையிலேயே பொதுத் தேர்வு வினாத்தாளும் அமையும் என தேர்வுத்துறை இயக்குனர் திட்டவட்டம்
இந்த ஆண்டு 2020 மார்ச் பொதுத்தேர்வு வினாத்தாள் ஆனது அரையாண்டு தேர்வில் கேட்கப்பட்டது போலவே அமையும் தேர்வுத்துறை இயக்குனர் திருமதி. உஷாராணி
தேர்வுத்துறை இயக்குனர் திருமதி. உஷாராணி இணை இயக்குனர்கள் திருமதி. அமுதவல்லி திரு. ராமசாமி ஆகியோர்களை சந்தித்து பத்தாம் வகுப்பு அனைத்து பாடங்களின் வினாத்தாள் வடிவமைப்பு குறித்தும் பொதுத் தேர்வு பணிகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.விவாதத்தின் முடிவில் இந்த ஆண்டு 2020 மார்ச் பொதுத்தேர்வு வினாத்தாள் ஆனது அரையாண்டு தேர்வில் கேட்கப்பட்டது போலவே அமையும் என்று திட்டவட்டமாக கூறினார்கள்.
வெற்றி செய்தி.....தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சேலம் மாவட்டத்தின் முக்கிய கோரிக்கையான M.phil ஊக்க ஊதியம் தொடர்பாக அனைத்து ஆவணங்களும் ஞாயிற்று கிழமை (05:01:2020) அன்று நடைப்பெற்ற மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் சமர்பிக்கபட்டது....இன்று நம்ம மாநில பொறுப்பாளர்கள் சென்னை சென்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநரை சந்தித்து M.phil ஊக்க ஊதியம் சம்மந்தமாக கோரிக்கை விளக்கப்பட்டது.அப்போது அங்கு வந்த இணைஇயக்குநரும் ஆமாம் சார் இது சம்மந்தமாக நிறைய Rti ,கோரிக்கை மனு வந்துகொண்டுள்ளதாகவும் கூறினாா்.அப்போது உடனடியாக இயக்குநர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை Finace controller அவர்களை வரவழைத்து இது சம்மந்தமாக விவாதித்தார்.மேலும் மாலை 3:00 மணிக்கு அனைத்து ஆதாரங்களும் ஆதாரத்துடன் என்னிடம் (Fiance controller ) விரிவாக விளக்கவும் என்று"நேரம் ஒதுக்கிவுள்ளாா்.ஏன் கோவை"ஆடிட் மட்டும் M.phil ஊக்க ஊதியத்திற்கு தணிக்கை தடை போடுகிறார்கள் என்றும் இயக்குநர் வினா எழுப்பிவுள்ளார்.கண்டிப்பாக இன்று நல்லதொரு முடிவு எட்டப்படும்.கஷ்டப்பட்டது என்றும் வீண் போகாது. மாநில கழகத்திற்கும், இதற்காகவே சென்னை
சென்ற நம் சேலம் மாவட்ட மாநிலச்செயலாளர் திரு அலெக்ஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.....மேலும் தேர்வுத்துறை இயக்குநர் அவர்களை சந்தித்த நம் மாநில பொறுப்பாளர்கள் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பு காலாண்டுத்தேர்வு வினாத்தாள், அரையாண்டுதேர்வு வினாத்தாள் ஆகியவற்றை நேரில் சமர்பித்து வேறுபாடுகளை சுட்டிக்காட்டினா்.தேர்வு துறை இயக்குநர் அவர்கள் அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் அமைப்பு முறை எப்படியோ அதே மாதிரி தான் 100% வரும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.காலாண்டு தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு வராது என்றும்,இன்னும் சில வாரத்தில் வர இருக்கும் PTA solution book la மாறி வந்தாலும் அதனை பின்பற்ற வேண்டாம் என்றும் அரையாண்டு தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு மட்டுமே அனைத்து பாடங்களுக்கும் நிரந்தரமானது என்று கூறிவிட்டார்.எனவே ஆசிரியர்களே கவனமாக இச்செய்தியை பின்பற்றவும்.என்றும் சங்க பணியில் தா.அ.கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,சேலம் மாவட்டம்.