Today School Morning Prayer Activities - 10.01.20

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.01.20
திருக்குறள்




அதிகாரம்:மெய்யுணர்தல்


திருக்குறள்:355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

விளக்கம்:

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.

பழமொழி

Distance lends enchantment

தூரத்துப் பச்சை கண்ணுக்கு இனிமை

இரண்டொழுக்கப் பண்புகள்

1. இப்புது வருடத்தில் மதிப்பு மிகு மாணவனாக இருப்பதே என் இலட்சியம்.

 2. இந்த இலட்சியம் நிறைவேற இந்த வருடம் முழுவதும் ஊக்கமாக செயல்படுவேன்.

பொன்மொழி

நம் ஆற்றல் எதுவென்று தெரியாமல் தன் வாழ்நாளை கழிப்பதால்  சிறுமை படுத்தப்படுகிறோம்.


-------வில்லியம் ஜேம்ஸ்

பொது அறிவு

* காவேரி ஆறு உற்பத்தியாகும் இடம் எங்குள்ளது?

 பாகுமண்டலா - கர்நாடகா

* போலியோ தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?

 ஜோனஸ் சால்க்.




English words & meanings


Pharmacology – study of drugs or medicines. மருந்தியல் என்பது மருந்து செயல்பாட்டினைப் பற்றிய துறையாகும்.

 Passionate - showing or caused by very strong feelings. தீவிர உணர்ச்சிக்கு ஆட்பட்ட.

ஆரோக்ய வாழ்வு

ரத்தசோகை உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது தேங்காய் பாலை குடித்து வந்தால் போதிய இரும்புச்சத்து கிடைக்கும்.

Some important  abbreviations for students

Hwy. - Highway. 

Ln. - Lane

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

கதிர் செய்த செயல்

குறள் :
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

விளக்கம் :
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

கதை :
பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

அவர் தூரமாக வரும்போதே, மாணவன் கதிர், டேய் அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்று விட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.

வீட்டில் ஒரே பையன் என்பதால் கதிருக்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும், கதிர் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறையவில்லை.

ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய கதிர், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கதிர் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிவிட்டான்.

ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.


நீதி :
நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அந்த துன்பம் நமக்கே வந்தடையும்.

வெள்ளி
சமூகவியல்

தஞ்சாவூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம். இது முந்தைய சோழ இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. இது தமிழகத்தின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி நதி தஞ்சாவூர் வழியாக பாய்கிறது
 பல நூற்றாண்டுகள் பழமையான சரஸ்வதி மஹால் நூலகம், பனை ஓலை கையெழுத்துப் பிரதி, வெண்கல சிலைகளுடன் தஞ்சாவூர் கலைக்கூடம் உள்ளது. தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் நாணயங்கள், நாட்டுப்புற கலைப்பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய செய்திகள்

10.01.20

◆மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 வயதுக்கு குறைவானோர் மாடுகளை பிடிக்க அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

◆நீலகிரியில் தாமதமாகத் தொடங்கிய உறை பனிப்பொழிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

◆காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள்  ஸ்ரீநகர் வந்துள்ளனர்.

◆சீன ராணுவத்தில் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மறைந்திருத்து தாக்கவரும் எதிரிகளை கண்காணிப்பது மற்றும் வீழ்த்துவது எளிதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

◆மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோா் முன்னேறினா்.

Today's Headlines

🌸Madurai District Collector has ordered that those who are less than 21 years are not allowed to participate in Alanganallur jallikattu.

🌸Normal life in Nilgiris gets affected due to the delayed frost snowshowers.


🌸Ambassadors to 15 countries including American ambassador to India, Kenneth I. Juster  arrived Srinagar to analyse the current situation in Kashmir.

🌸It has been informed that small type unmanned  planes are included in chinese military, by which the enemies who hide and attack can be spied and attacked easily.

🌸In Malaysia Masters Badminton event, Indian star players P. V.  Sindhu and Saina Nehwal progressed to second round after winning the first round.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)