Today School Morning Prayer Activities - 07.01.20

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.01.20
திருக்குறள்



அதிகாரம்:மெய்யுணர்தல்

திருக்குறள்:352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

விளக்கம்:

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

பழமொழி

A drawing man will catch at a straw

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. இப்புது வருடத்தில் மதிப்பு மிகு மாணவனாக இருப்பதே என் இலட்சியம்.

 2. இந்த இலட்சியம் நிறைவேற இந்த வருடம் முழுவதும் ஊக்கமாக செயல்படுவேன்.

பொன்மொழி


தவறுகளை சுட்டிக்காட்டி நன்மை செய்யுங்கள் .தகுதியான பாராட்டு தவறுகளை வளரவிடாது.   

அப்துல் கலாம்.

பொது அறிவு

1.ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் நாடு எது?

இலங்கை.       

 2.பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சியளிக்கும் நாடு எது?

இஸ்ரேல்.

English words & meanings

* Meteorology – study of weather. வானிலையியல். இதுவளிமண்டலம் தொடர்பான அறிவியல் துறை ஆகும்.

* Mellifluous -  pleasingly smooth and musical to hear,தேன் போன்று இனிமையான குரல்.

ஆரோக்ய வாழ்வு

தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் மோனோலாரின் ஆக மாறுகிறது .இது தேங்காயில் மட்டுமே அதிகம் உள்ளது. கொழுப்பு அமிலமான சாச்சுரேட்டர் அமிலமும் உண்டு.

Some important  abbreviations for students

i.e - id est (that is)   

cf. - confer(compare)

நீதிக்கதை

ஒட்டகத்திற்கு நேர்ந்த கவலை

குறள் :
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

விளக்கம் :
ஒருவனுடைய சோம்பலில் மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

கதை :
ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம்.

ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது.

குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன.


தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று.

நீதி :
சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

செவ்வாய்
English & Art

💁 Crazy English language facts-2

An amphigram is a word that looks the same from various orientations. For example ,the word "swims" will be the same even when turned upside down

♥NooN,pod,suns.

🌸 English quiz

Using the four letters below only, create a seven letter word.

UMNI


The answer is : minimum

ART - 41

Click here to see the ART video


இன்றைய செய்திகள்

07.01.20

◆தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

◆தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா) நிதியைப் பயன்படுத்தி விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

◆ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

◆சென்னை மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் கென்ய வீரா் பெலிக்ஸ் ராப்பும் மகளிர் பிரிவில் தமிழகத்தின் சுகுணாவும் முதலிடத்தைப் பெற்றனா்.





◆கான்பூரில் நடைபெற்ற ரஞ்சி ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராகத் தமிழக அணி 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Today's Headlines

🌸 The first session of this year's Tamil Nadu Legislative Assembly commenced yesterday (Jan. 6) with the Governor's speech.

🌸 The school education department has ordered the students of elementary and middle schools in Tamil Nadu to take part in sports competitions using the Integrated Education Scheme (Samraksha Sikshsa) fund.

 🌸 Students are protesting in various areas condemning the violence at JNU University.


🌸 In the Chennai Marathon in Men's division Kenya Player Felex Rop and in women's division Tamil player Suguna. K won the first place.

 🌸Tamil Nadu won 3 points against Uttar Pradesh in Ranchi match in Kanpur.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)