Today School Morning Prayer Activities - 08.01.20

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.01.20

ஜனவரி - 8


உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்


திருக்குறள்


அதிகாரம்:மெய்யுணர்தல்

திருக்குறள்:353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

விளக்கம்:

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

பழமொழி

A sound mind in a sound body.

உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. இப்புது வருடத்தில் மதிப்பு மிகு மாணவனாக இருப்பதே என் இலட்சியம்.

 2. இந்த இலட்சியம் நிறைவேற இந்த வருடம் முழுவதும் ஊக்கமாக செயல்படுவேன்.

பொன்மொழி

வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் எனில் தன்னுள் இருக்கும் ஆற்றலை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

------ரைட் சகோதரர்கள்

பொது அறிவு

1.அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

ஆப்பிரிக்கா கண்டம்.

2.உலகில் பாலைவனமே இல்லாத கண்டம் எது?

ஐரோப்பா

English words & meanings

Neurobiology – study of anatomy of the nervous system.நரம்பணுவியல்  நரம்பு மண்டலத்தின் அமைப்பையும், அது எவ்வாறு மனித இயக்கத்தை ஏதுவாக்கின்றது என்பதையும் விரிவாக ஆயும் அறிவியலாகும் .

neoteric - modern or new,
புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய,
புதுமையான.

ஆரோக்ய வாழ்வு

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் அதிகம் கொடுக்கவேண்டும். இதிலுள்ள நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் மோனோலாரினாக மாறும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Some important  abbreviations for students

c. - circa (around or approximately) 

Ct. - Court

நீதிக்கதை

ஒரு கழுதையின் கதை

குறள் :

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

விளக்கம் :
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

கதை :
தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த ஒருவர் கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.

கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர், ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா? எனக் கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான்.

தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார். ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா? என்று கேட்டார்.

தந்தையும் மகனும் யோசித்தனர் இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இரண்டு பேருமே ஏறிச் செல்வோம் என கழுதையின் முதுகில் ஏறிக் கொண்டனர்.

இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா? என்று கூறினார்கள்.

மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல், இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர்.

இதைகண்டதும் அங்கிருந்தவர்கள், இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் என கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

நீதி :
மற்றவர்களுக்காக வாழக் கூடாது. ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என அறிந்து கொண்டு அதன்படி செய்ய வேண்டும்.

புதன்

கணிதம்& கையெழுத்து

ரிப்பன் கணக்கு

ஒரு மாணவ விடுதியில் முகப்பு தோரணம் செய்வதாக மாணவியர் காப்பாளரிடம் கூறினர் .
அதற்கு 3:2:7 என்ற அளவுகளில் ரிப்பன் வேண்டும் என்றனர். உடனே காப்பாளர் ஏற்கனவே வைத்திருந்த 24 மீ நீளமுடைய ரிப்பனை கொடுத்தார்.... கண் இமைக்கும் நேரத்தில் அதனை 3 ஆக பிரித்து அழகான தோரணம் செய்து அசத்தினர்.

கேள்வி:  ரிப்பன் மூன்றின் அளவுகள் என்னென்ன???

விடை:
3+2+7 = 12
12/24  = 2
 எனவே
3×2 = 6மீ
2×2 = 4மீ
7×2 =14மீ

கையெழுத்துப் பயிற்சி - 23




இன்றைய செய்திகள்

08.01.20

◆வரும் 11, 12-ம் தேதிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்ய விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

◆ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் பாலமேடு வாடிவாசல்: ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு.



◆ஜார்க்கண்ட் அரசு நடுநிலைப் பள்ளி தூய்மையில் நாட்டுக்கே உதாரணமாக இருப்பதாக நிதி ஆயோக் பாராட்டு தெரிவித்துள்ளது.

◆அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில் நாம் ஆபத்தான காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஐ.நா.தெரிவித்துள்ளது.

◆திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், காரைக்கால் ஓஎன்ஜிசி ஆகியவை இணைந்து நடத்திய 48-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் நடைபெற்றது.இதில் சென்னையைச் சேர்ந்த ஜெ.சரண்யா சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

🌸Tamil Nadu Chief Election Officer Satyapratha Sahu said that the Voters' Special Camp will be held on 11th and 12th of this month and can be used to add names or change the address .

 🌸 Palamedu Vadivasal ready for Jallikattu: preparations are made for one lakh people to see the event.

 🌸   Nidhi aayog praised that Jharkhand Government Middle School set an example on cleanliness for the whole nation

 🌸 The United Nations has revealed that we are living in a dangerous period of time as there arise a conflict between America - and Iran.

 🌸Thiruvarur District Chess Club and Karaikal ONGC jointly  conducted the 48th Tamil Nadu State Women's Chess Championship at Thiruvarur, where J. Saranya of Chennai won the championship.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank