Today School Morning Prayer Activities - 09.01.20

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.01.20
திருக்குறள்




அதிகாரம்:மெய்யுணர்தல்

திருக்குறள்:354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

விளக்கம்:

உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

பழமொழி


chew your food well and live a long life
 நொறுங்கத் தின்றால் நூறு வயது.

இரண்டொழுக்க பண்புகள்

1. இப்புது வருடத்தில் மதிப்பு மிகு மாணவனாக இருப்பதே என் இலட்சியம்.

 2. இந்த இலட்சியம் நிறைவேற இந்த வருடம் முழுவதும் ஊக்கமாக செயல்படுவேன்.

பொன்மொழி

நெருக்கடிக்கு ஆளாகும் போது தான் மனிதன் அற்புதங்களை செய்கிறான்.

--------பிராங்க் விட்டல்

பொது அறிவு

1.பிளாஸ்டிக் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

ஜெர்மன்.

2.முதன் முதலில் புத்தகத்தை அச்சடித்த நாடு எது?

சீனா

English words & meanings

Odontology – study of teeth. பல் மருத்துவம் மற்றும் பல் குறித்த அறிவியல்.

Opulent - costly and luxurious, செழுமையான

ஆரோக்ய வாழ்வு

வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு தேங்காய்ப்பால் அதிகம் உதவுகிறது . இது எலும்புகளை பலமாக்குவதோடு எலும்பு சம்பந்தப்பட்ட ஆஸ்டியோபெராசிஸ் நோயை கட்டுக்குள் வைக்கிறது.

Some important  abbreviations for students

Apt. - Apartment.   

Ave. - Avenue

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்


கடவுளின் சிறப்பு

குறள் :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம் :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்று இருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

கதை :
ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார்.

ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார்.

ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான்.

விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார்.

இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின.

நீதி :
அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.

வியாழன்
அறிவியல்




*வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் கால்களினால் உணரும்.

* அவைகளின் உணவு திரவங்கள் மட்டுமே.

* இவைகள் சகதியான குட்டையில் இருந்தே நீர் அருந்தும்.

இன்றைய செய்திகள்


09.01.20

★போகி பண்டிகையின்போது டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

★வரும் 11-ம் தேதி நடைபெற இருந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வு  13-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

★ஈரான், அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில் ஈரான், ஈராக் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

★ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது.

★விராட் கோலியின் அற்புதமான சிக்ஸர், ஷைனியின் மிரளவைக்கும் வேகப்பந்துவீச்சு, ஷர்துல் தாக்கூரின் அபார பந்துவீச்சு ஆகியவற்றால் இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியி்ல் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸  Severe action will be taken against people who burn plastic or tyres during Bohi warned Minister for Environment and Pollution.

🌸 The exams for Pro-Analyst in Police department which is to be held on 11th is postponed to 13th.

🌸 As there is war tension between Iran and America Indian Foreign Affairs Ministry advised that Indian planes should avoid flying above Iran and Iraq territories.

🌸 There is a mild tremor in Iran. The registered measure is 4.9 Richter.


🌸 Virat Kholi's tremendous sixer, Shiny's terrific fast bowling and Sherthul Tagore's marvellous bowling by all these India won by 7 wickets in the second T-20 test match against Sri Lanka at Indhur.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)