CTET விண்ணப்பிக்கலாம் முழுமையான தகவல்கள்!!

சிடெட் தேர்வில் தேர்ச்சிபெறும் பட்டதாரிகள் சிபிஎஸ் அங்கீகாரம் பெற்ற கேந்திரிய வித்யாலயா , ஜவஹர் வித்யாலயா , மத்திய திபெத் பள்ளிகள் , உதவிபெறாத தனியார் பள்ளிகள் மற்றும் டெட் தேர்வு இல்லாதபட்சத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம்.


சிடெட் தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் . கல்வித்தகுதி முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு பிளஸ் டூ முடித்துவிட்டு இரண்டு ஆண்டு தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் இறுதி ஆண்டு படிப்பவராக இருக்கலாம்  அல்லது பிளஸ் டூ தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று , நான்கு ஆண்டு இளநிலை தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் இறுதி ஆண்டு படிப்பவராக இருக்கலாம்.

அல்லது பிளஸ் டூ தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சிறப்புக்கல்வி ஆசிரியர் டிப்ளமோவில் இறுதி ஆண்டு படிப்பவராக இருக்கலாம். இளநிலைப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஎட் படித்தவராக இருக்கலாம்.


ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் இறுதி ஆண்டு படிப்பவராக இருக்கலாம் அல்லது 50 சத வீத மதிப்பெண்களுடன் இளநிலைப் படிப்பை முடித்து ஓர் ஆண்டு பிஎட் படித்தவராக இருக்கலாம்.

பிளஸ் டூ தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 4 ஆண்டு தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் இறுதி ஆண்டு படித்தவராக இருக்கலாம் . பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஏ , பிஎஸ்சி எட் அல்லது பிஏஎட் , பிஎஸ்சி எட் படித்தவராக இருக்கலாம் . 50 சதவீத மதிப் பெண்களுடன் இளநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்று சிறப்புக்கல்வியில் பிஎட் படித்தவராக இருக்கலாம்.என்சிடிஇ அங்கீகாரம் பெற்ற பிஎட் படித்தவர்களும் டெட் மற்றும் சிடெட் தேர்வை எழுதலாம்.


இரு தேர்வுகள்

முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் பணிக்கு முதல் தாளும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர் பணிக்கு இரண்டாம் தாளும் என இரு தேர்வுகள் நடத்தப்படும் . இரண்டு நிலைகளிலும் பணியாற்ற விரும்பினால் இரு தேர்வுகளையும் எழுதலாம்.

இரு மொழிகளை தேர்வு எழுதுவதற்கான விருப்ப மொழிகளாகத் தேர்ந்தெடுக்கலாம் . ஆங்கிலம் , தமிழ் பட்டியலில் இருக்கிறது . முதல் தாளும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் முறை , மொழி 1 மற்றும் மொழி II , கணிதம் , சுற்றுச்சூழல் போன்ற பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும் . ஒவ்வொரு பகுதிக்கும் 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்கள்.

 இரண்டாம் தாளில் குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பித்தல் முறை , மொழி 1 மற்றும் மொழி II , கணிதம் மற்றும் அறிவியல் , அல்லது சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் . ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 150 மதிப்பெண்கள் . கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும் . ஜனவரி 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் கிடைக்கும் . விண்ணப்பக் கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ . 1000 . இரு தேர்வுக்கும் சேர்த்து ரூ . 1200 . தாழ்த்தப்பட்ட , பழங்குடி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ . 500 . இரு தேர்வுக்கும் ரூ . 600 . வங்கியில் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து செலுத்தவேண்டும் . - டெபிட்கார்டு , கிரெடிட் கார்டு , நெட்பேங்கிங் 3 மற்றும் இ செலான் முறையில் சிண்டிகேட் வங்கி 5 அல்லது கனரா வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம்.

 விண்ணப்பிக்கும் போது முழுமையான அஞ்சல் முகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் குறிப்பிடவேண்டும் .
பெயர் , தந்தை பெயர் , தாய் பெயர் , பிறந்த தேதி , பத்தாம் வகுப்புச் சான்றிதழ் , ஆசிரியர் பயிற்சி சான்றுகள் , சுயகையொப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களை ஆன்லைனில் பதிவேற்றவேண்டும்.


விண்ணப்பத்தில் ஏதும் பிழைகள் இருந்தால் 17 . 3 . 2020 முதல் 24 . 3 . 2020 தேதிக்குள் ஆன்லைனில் திருத்தம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

தேர்வுமையங்கள் விண்ணப்பத்தில் விருப்பமான நான்கு தேர்வு மையங்களைக் குறிப்பிடலாம் . தேர்வை எழுதுவதற்கான அட்மிட் கார்டை சிடெட் இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் . தேர்வு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர் தேர்வு மையத்தில் இருக்கவேண்டும்.

 மாதிரி கேள்வித்தாள்கள் , பாடத்திட்டம் , கேள்விகள் கேட்கப்படும் முறை போன்றவற்றைப் பற்றிய தகவல்களை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . சிடெட் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் நாள் : 05/07/2020

தேர்வுக்கட்டணம் செலுத்த
கடைசி தேதி : 27 . 2 . 2020
விண்ணப்பிக்கக்
கடைசி தேதி : 24 . 2 . 2020

விவரங்களுக்கு


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)