ஒரே ஒரு missed call மூலம் இனி LPG Gas Cylinder-ஐ புக் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்

 ஒரே ஒரு missed call மூலம் இனி LPG Gas Cylinder-ஐ புக் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்


2021 ஜனவரி 1 முதல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், மிஸ்டு கால் கொடுத்து கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யவும் நுகர்வோர் சார்ந்த மற்ற பணிகளையும் செய்துகொள்ளும் செயல்முறையை தொடக்கியுள்ளது.

மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த மிஸ்டு கால் வசதியை துவக்கி வைத்தார். இந்தேன் எரிவாயு சிலிண்டர் ரீஃபில் முன்பதிவு மற்றும் புதிய LPG இணைப்பு என இரண்டுக்கும் நுகர்வோரின் வசதிக்காக ஒரே எண் வசதி அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு பணிகளுக்கும் இந்த எண்ணையே பயன்படுத்தலாம்.

 நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள இந்தேன் ஆயில் (Indane Oil) வாடிக்கையாளர்கள் இப்போது ஒரே மொபைல் எண்ணை ரீஃபில் முன்பதிவு செய்யவும் புதிய இணைப்பு பெறவும் பயன்படுத்தலாம். அந்த எண் -  8454955555.

வழக்கமான தானியங்கி தொலைபேசி அழைப்புகளில் வாடிக்கையாளர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால், இப்போது இந்த மிஸ்டு கால் வசதி மூலம் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சமாகும்.

அமைச்சர் வெளியிட்ட ட்வீட்களில், பாஜக (BJP) தலைமையிலான அரசாங்கத்தின் "நுகர்வோர் சார்ந்த முயற்சிகள்" குறித்து அமைச்சர் பேசினார்.

“டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) நோக்கத்திற்கு ஏற்ப, இந்த நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட முயற்சிகள், LPG refill மற்றும் புதிய இணைப்பு பதிவை எளிதாகவும் இலவசமாகவும் ஆக்குகிறது. இது நுகர்வோருக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு பயனளிக்கும்” என்று பிரதான் கூறினார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)