L1
- Get link
- X
- Other Apps
✨ வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் ✨
DOOZY STUDY 🚀
Created by: S.VAITHEESWARAPRABU
🎓 அற்புதம்! வினாடி வினா முடிந்தது! 🏆
கி.பி. 1001-ல் ஷாகி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பில் முகமது கஜினியால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
ஜெயபாலர்
ஜெயபாலரின் மகன் யார்?
ஆனந்தபாலர்
ஜெயபாலருக்குப் பின் கஜினி மாமுத்திற்கு (முகமது கஜினி) எதிராகப் போரிட்டவர் யார்?
ஆனந்தபாலர்
ஆனந்தபாலர் எப்போது கஜினி மாமுத்தால் தோற்கடிக்கப்பட்டார்?
கி.பி. 1008
கஜினி மாமுத், ஆனந்தபாலரை எந்த இடத்தில் தோற்கடித்தார்?
வைகிந்த்
வைகிந்தில் பெற்ற வெற்றியின் விளைவாக கஜினி மாமுத் தனது ஆட்சி அதிகாரத்தை எங்கு வரை விரிவுபடுத்தினார்?
பஞ்சாப் வரை
1011-ல் கஜினி மாமுதுவால் சூறையாடப்பட்ட நகரங்கள் எவை?
நாகர்கோட், தானேஸ்வர்
1018-ஆம் ஆண்டு எந்நகரை கஜினி மாமுது கொள்ளையடித்தார்?
மதுரா, கன்னோஜ்
1018-ல் கஜினி மாமுது கன்னோஜை கொள்ளையடித்த போது அதன் அரசர் யார்?
ராஜ்யபாலர்
கன்னோஜிற்குப் பின் கஜினி மாமுது எந்த நகரின் மீது படையெடுத்தார்?
குஜராத்
கஜினி மாமுது 1024-ல் படையெடுத்த போது சோலங்கியின் அரசர் யார்?
முதலாம் பீமதேவர்
கஜினி மாமுது அன்கில்வாட் நகரை எப்போது சூறையாடினார்?
கி.பி. 1024
கஜினி மாமுத்தின் இறுதி படையெடுப்பு எது?
சோமநாதபுரம் கோவில் படையெடுப்பு
கஜினி மாமுது எந்த ஆண்டு சோமநாதபுரம் கோவிலின் மீது படையெடுத்தார்?
கி.பி. 1024
கஜினி மாமுது எப்போது மரணமடைந்தார்?
கி.பி. 1030
கஜானாவியப் பேரரசு எதனை உள்ளடக்கியது?
பாரசீகம், ஆக்ஸஸுக்கு அப்பால் உள்ள பகுதிகள், ஆப்கானிஸ்தான், பஞ்சாப்
கஜினிக்குக் கப்பம் கட்டிய குறுநிலத் தலைவராக இருந்தவர் யார்?
முகமது கோரி (கோர் பகுதியை சேர்ந்தவர்)
யாரைப் போலன்றி முகமது கோரி இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய விரும்பினார்?
முகமது கஜினி
முகமது கஜினியின் முக்கிய நோக்கம் என்ன?
சூறையாடுதல்
முகமது கோரி முல்தானை எப்போது கைப்பற்றினார்?
கி.பி. 1175
முகமது கோரி பஞ்சாப்பை எப்போது கைப்பற்றினார்?
கி.பி. 1186
முகமது கோரி தனது பெரும்படையுடன் எதன் வழியாக லாகூரை வந்தடைந்தார்?
பெஷாவர், முல்தான்
இராஜபுத்திரர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய போர் எது?
இரண்டாம் தரெய்ன் போர்
டெல்லியின் முதல் சுல்தான் என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்?
குத்புதீன் ஐபக்
முகமது கோரி இறந்த பின் அவருக்கு சொந்தமான இந்திய பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவர் யார்?
குத்புதீன் ஐபக்
இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசு எங்கு உறுதியாக நிறுவப்பட்டது?
ஆஜ்மீர்
முகமது கோரி எப்போது மரணமடைந்தார்?
கி.பி. 1206
சித்தூரில் உள்ள "ஜெய ஸ்தம்பா" எனும் வெற்றித்தூணை நிறுவியவர் யார்?
சித்தூரின் ராணா (அரசர்)
இந்தியாவின் மேற்கு பகுதிகளில் வலிமை மிக்க இராஜபுத்திர அரசினை நிறுவியவர்கள் யார்?
பிரதிகாரர்கள்
இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வலிமை மிக்க இராஜபுத்திர அரசினை நிறுவியவர்கள் யார்?
பாலர்கள்
சிந்துப்பகுதியை அராபியர்கள் எப்போது கைப்பற்றினர்?
கி.பி. 712
கி.பி. 712-ல் சிந்துப்பகுதியை அராபியர்கள் கைப்பற்றினாலும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் வரலாறு உடனடியாக தொடங்காததற்கு காரணம் என்ன?
ராஜபுத்திர (கன்னோஜ்) அரசர்களின் எதிர்ப்பு
அராபியர்களை எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க இராஜபுத்திர அரசர் (கி.பி. 736) யார்?
யசோவர்மன்
இஸ்லாமியர்களின் காலகட்டம் இந்தியாவில் எப்போது தொடங்கியது?
கி.பி. 1200
"ராஜ்புத்" எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்?
சமஸ்கிருதம் ("ராஜ்புத்ர")
"ராஜ்புத்" என்பதன் பொருள் என்ன?
அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல்
யாருடைய மறைவிற்குப் பின் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக் கொண்டனர்?
ஹர்சர்
ராஜபுத்திர அரச வம்சத்தின் மிக முக்கியமான மூன்று குலங்களில் பொருந்தாதது எது?
வாயு குலம்
சூரியகுல, சந்திரகுல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் யார்?
பந்தேல்கண்டின் சந்தேலர்கள்
கீழ்க்கண்டவர்களில் தங்களை 'அக்னி குல தோன்றல்கள்' என கூறிக் கொள்ளாத மரபினர் யார்?
சந்தேலர்கள்
தோமரர்கள் எப்பகுதியை ஆட்சி செய்தனர்?
ஹரியானா
12ஆம் நூற்றாண்டில் தோமரர்களை தோற்கடித்தவர்கள் யார்?
சௌகான்கள்
கி.பி. 1829 இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரச குலங்களைப் பட்டியலிட்டவர் யார்?
ஜேம்ஸ்டாட்
பிரதிகாரர்கள் (அ) கூர்ஜரப் பிரதிகாரர்கள் எங்கிருந்து ஆட்சி புரிந்தனர்?
கூர்ஜராட்டிரா (ஜோத்பூரில் உள்ளது)
கி.பி. 6ஆம் நூற்றாண்டில் கூர்ஜர அரசவம்சத்தின் அடிக்கல்லை நாட்டியவர் யார்?
ஹரிச்சந்திரா
பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் யார்?
முதலாம் நாகபட்டர்
சிந்துவின் மீது அராபியர் மேற்கொண்ட படையெடுப்பை முறியடித்தவர் யார்?
முதலாம் நாகபட்டர்
முதலாம் நாகபட்டருக்கு பின் ஆட்சி செய்து, ஒட்டுமொத்த வட இந்தியாவின் மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டவர் யார்?
வத்சராஜா
வளம் நிறைந்த கன்னோஜின் மீது மேலாதிக்கத்தை நிறுவ முயன்றவர்களில் பொருந்தாதவர் யார்?
மதுரை பாண்டியர்கள்
பால அரச வம்சத்தை உருவாக்கியவர் யார்?
கோபாலர்
தர்மபாலர் எந்த மதத்தை ஆதரித்தார்?
பௌத்தம்
தேவபாலர், பாலர்களின் ஆட்சி அதிகாரத்தை எங்கு வரை விரிவுபடுத்தினார்?
காமரூபம் (அஸ்ஸாம்) வரை
யாருடைய ஆட்சிக்காலங்கள் "வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்" என வரலாற்றறிஞர் ஆர்.சி.மஜும்தார் கூறியுள்ளார்?
தர்மபாலர், தேவபாலர்
இரண்டாம் பால வம்சத்தை தோற்றுவித்தவர் (மற்றும் பால வம்சத்தின் மிகச்சிறந்த வலிமை மிக்க அரசர்) யார்?
முதலாம் மகிபாலர்
யாருடைய வீழ்ச்சியானது மகிபாலருக்கு வடஇந்திய அரசியல் நிகழ்வுகளில் முதன்மையான பாத்திரத்தை வகிக்கும் வாய்ப்பை வழங்கியது?
பிரதிகாரர்களின் வீழ்ச்சி
யாருடைய படையெடுப்பின் காரணமாக வாரணாசிக்கு அப்பால் முதலாம் மகிபாலரால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த இயலவில்லை?
இராஜேந்திர சோழனின் படையெடுப்பு
பால வம்சத்திற்கு பின் வருகை புரிந்த வம்சம் எது?
சேனா வம்சம்
சௌகான்களின் ஆட்சி காலம் என்ன?
கி.பி. 956 முதல் 1192 வரை
சௌகான்களின் தலைநகரம் எது?
சாகம்பரி (இராஜஸ்தான்)
சௌகான்கள் என்ற வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
சிம்மராஜ்
ஆஜ்மீர் நகரை தோற்றுவித்தவர் என அறியப்படுபவர் யார்?
சிம்மராஜ்
சௌகான் அரசர்களில் கடைசி மற்றும் தலைசிறந்த அரசர் யார்?
பிருதிவிராஜ் சௌகான்
அராபிய படையெடுப்பின்போது பிரதிகாரர்களோடு துணை நின்றவர்கள் யார்?
சௌகான்கள்
முதலாம் தரெய்ன் போர் எப்போது நடைபெற்றது?
கி.பி. 1191
முதலாம் தரெய்ன் போர் யாருக்கிடையே நடைபெற்றது?
பிருதிவிராஜ் சௌகான் மற்றும் முகமது கோரி
முதலாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்றவர் யார்?
பிருதிவிராஜ் சௌகான்
இரண்டாம் தரெய்ன் போர் எப்போது நடைபெற்றது?
கி.பி. 1192
இரண்டாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்றவர் யார்?
முகமது கோரி
எந்த போரில் பிருதிவிராஜ் சௌகான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்?
இரண்டாம் தரெய்ன் போர்
ராஜபுத்திரர்களின் குடியிருப்புக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை எவை?
குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் கோட்டை, உதய்பூர் அரண்மனை
பந்தேல்கண்டில் உள்ள கஜுராஹோவில் எத்தனை கோவில்கள் உள்ளன?
30 கோவில்கள்
இராஜபுத்திர காலத்து 16 இந்து மற்றும் சமணக்கோவில்கள் எங்கு உள்ளன?
ஒசியான் (ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவிலுள்ளது)
அபுகுன்றின் மேலுள்ள சமண கோவிலில் எந்த கற்களால் கட்டப்பட்ட கூடம் உள்ளது?
வெண்மை நிற சலவை கற்கள்
பாலர்கள் எம்மதத்தை பின்பற்றியவர்கள்?
மகாயான பௌத்தம்
பாலர்களின் சமய பரப்பாளர்கள் மூலம் எங்கு பௌத்தம் நிறுவப்பட்டது?
திபெத்தில்
திபெத்திய பௌத்தத்தை சீர்திருத்தம் செய்தவர் யார்?
அதிசா
அதிசா எந்த மடாலயத்தின் தலைவராக இருந்தார்?
விக்ரமசீலா மடாலயம்
பாலர்களின் ஆதரவால் உருவான தனித்தன்மை வாய்ந்த புதிய பாணியைக் கொண்ட கலைப்பள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலர்களின் கலை (அ) கிழக்கு இந்தியக் கலை
ரக்ஷாபந்தன் எனும் விழாவானது யாருடன் தொடர்புடையது?
ராஜபுத்திரர்கள்
ரக்ஷாபந்தன் என்பதன் பொருள் என்ன?
ரக்ஷா-பாதுகாப்பு, பந்தன்-கட்டுதல் (அ) உறவு
1905 ல் வங்கப்பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவை பெருமளவில் நடத்தியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
1905 ல் தாகூர் எதற்காக ரக்ஷாபந்தன் விழாவை பெருமளவில் நடத்தினார்?
இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்காக
இஸ்லாம் எங்கு தோன்றியது?
அராபியாவிலுள்ள மெக்காவில்
இஸ்லாமை தோற்றுவித்தவர் யார்?
இறைதூதர் முகமது நபிகள் நாயகம்
கலீஃபா என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி
கஜினியை தலைநகராகக் கொண்ட துருக்கிய ஆளுநர் யார்?
அல்ப்-டஜின்
சுபக்டிஜினின் மகன் யார்?
கஜினி மாமூது
கி.பி. 712 ஆம் ஆண்டு சிந்துவின் மீது படையெடுத்த உமையது அரசின் படைத்தளபதி யார்?
முகமது பின் காசிம்
முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் யார்?
சிந்துவின் அரசர் தாகிர்
அரேபியர்கள் பூஜ்யியம், சதுரங்கத்தை எங்கிருந்து கற்றுக்கொண்டனர்?
இந்தியா
பூஜ்யியத்தை கண்டறிந்தவர்கள் யார்?
இந்தியர்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment