L3
- Get link
- X
- Other Apps
✨ டெல்லி சுல்தானியம் ✨
DOOZY STUDY 🚀
Created by: S.VAITHEESWARAPRABU
🎓 அற்புதம்! வினாடி வினா முடிந்தது! 🏆
கியாசுதீன் பால்பனுடன் பகைமை பாராட்டியவர்கள் யார்?
நாற்பதின்மர் குழு
"நாற்பதின்மர்" குழுவை ஒழித்தவர் யார்?
கியாசுதீன் பால்பன்
தனது ஆட்சிக்கெதிராக சதி செய்வோரையும் இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறையொன்றை நிறுவியவர் யார்?
கியாசுதீன் பால்பன்
பால்பனுக்கு எதிராக கலகம் செய்த எந்த ஆளுநர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்?
துக்ரில்கான் (வங்காள ஆளுநர்)
பால்பன் யாரிடம் கருணை இல்லாமல் நடந்து கொண்டார்?
மீவாட்டை சேர்ந்த மியோக்கள்
மீவாட்டை சேர்ந்த மியோக்கள் என்பவர்கள் யார்?
வடமேற்கு இந்தியாவைச் சார்ந்த ராஜபுத்திர முஸ்லீம்கள்
யாரிடமிருந்து "மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து வரமாட்டார்கள்" எனும் உறுதிமொழியை பால்பன் பெற்றார்?
குலகு கான்
குலகு கான் என்பவர் யார்?
செங்கிஸ்கானின் பேரன், ஈரானின் மங்கோலிய வைஸ்ராய்
பால்பன் யாரை ஆதரித்தார்?
பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமீர்குஸ்ரு
பால்பன் எப்போது மறைந்தார்?
கி.பி. 1287
பால்பனின் மகன் யார்?
கைகுபாத் (திறமையற்றவர்)
கைகுபாத்தை கொல்ல ஆள் அனுப்பியவர் யார்?
ஜலாலுதீன் கில்ஜி
1290 இல் அரசப்பிரதிநிதியாகப் (நாயிப்) பொறுப்பேற்றவர் யார்?
மாலிக் ஜலாலுதீன் கில்ஜி
கில்ஜி அரச வம்சத்தின் காலம் என்ன?
1290-1320
அலாவுதீன் கில்ஜியின் பாராட்டுக்குரிய படையெடுப்புகள் எவை?
பஞ்சாபில் மங்கோலியர்களுக்கு எதிராக, ராஜஸ்தானத்திற்கும், குஜராத்திற்கும் எதிரான படையெடுப்புகள்
அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்?
மாலிக்கபூர்
கி.பி. 1310 இல் அலாவுதீன் கில்ஜி மதுரை வரை படையெடுத்துச் செல்ல யாரைப் பணித்தார்?
மாலிக்கபூர்
அலாவுதீன் கில்ஜியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் யார்?
தக்காண அரசுகளான தேவகிரி யாதவர்கள், துவார சமுத்திரத்தின் ஹொய்சாளர்கள், வாராங்கல் காகத்தியர்கள், மதுரைப் பாண்டியர்கள்
அலாவுதீன் கில்ஜியின் படைகள் சித்தூரை எப்போது சூறையாடியது?
கி.பி. 1303
'ஜவ்ஹர் முறை' என்றால் என்ன?
குழுவாக பெண்கள் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வது
சித்தூர் சூறையாடலின் போது சித்தூர் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன செய்தனர்?
ஜவ்ஹர் முறையை மேற்கொண்டனர்
எந்த நகரைச் சுற்றியுள்ள வேளாண் நிலங்களை அளவாய்வு செய்து அலாவுதீன் கில்ஜி ஒரு குறிப்பிட்ட அளவிலான நிரந்தர வரியை விதித்தார்?
டெல்லி
அலாவுதீன் கில்ஜி வரிகளை வசூல் செய்யும் பணியை யாரிடம் ஒப்படைத்தார்?
இராணுவ அதிகாரிகளிடம்
கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர் யார்?
அலாவுதீன் கில்ஜி
உணவு தானிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தது யார்?
சுல்தான்
அலாவுதீன் கில்ஜி எப்போது மறைந்தார்?
கி.பி. 1316
துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
கியாசுதீன் துக்ளக்
கியாசுதீன் துக்ளக், வாராங்கல்லுக்கு எதிராகப் போரிட யாரை அனுப்பி வைத்தார்?
ஜானாகான் (மகன்)
ஜானாகான் யாரை வெற்றிக் கொண்டார்?
வாராங்கல் அரசர் பிரதாபருத்ரன்
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகருக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
கியாசுதீன் துக்ளக்
துக்ளகாபாத் நகரம் அமைப்பதற்கான செல்வம் எங்கிருந்து பெறப்பட்டது?
வாராங்கல் கொள்ளையடிப்பு
கியாசுதீன் துக்ளக்கைக் கொன்றவர் யார்?
ஜானாகான் (மகன்)
கியாசுதீன் துக்ளக்கிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
ஜானாகான்
ஜானாகான் எப்போது பதவி ஏற்றார்?
கி.பி. 1325
ஜானாகான் தனது பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்?
முகமது பின் துக்ளக்
முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலம் என்ன?
1325 - 1351
தேவகிரியின் பெயரை தௌலதாபாத் எனப் பெயர் மாற்றியவர் யார்?
முகமது பின் துக்ளக்
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார்?
டெல்லியிலிருந்து தேவகிரிக்கு
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை மீண்டும் எங்கு மாற்றினார்?
தேவகிரியிலிருந்து டெல்லிக்கு
தௌலதாபாத்தையும் அதைச் சுற்றி கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சுதந்திர அரசாக அறிவித்தவர் யார்?
முகமது பின் துக்ளக்கின் படைவீரராகிய பாமினி
எந்த ஆண்டு மதுரை தனி சுல்தானியமாக உருவானது?
கி.பி. 1334
வங்காளம் எந்த ஆண்டு சுதந்திர அரசானது?
கி.பி. 1346
முகமது பின் துக்ளக் எப்போது மறைந்தார்?
கி.பி. 1351 மார்ச் 23
முகமது பின் துக்ளக்கிற்கு பின் அரியணை ஏறியவர் யார்?
கியாசுதீனின் இளைய சகோதரரின் மகனான பிரோஷ்
ஏழை முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளைகளை நிறுவியவர் யார்?
பிரோஷ் ஷா துக்ளக்
இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தவர் யார்?
பிரோஷ் ஷா துக்ளக்
மனிதாபிமானமற்ற, கொடூரமான தண்டனைகளை ஒழித்தவர் யார்?
பிரோஷ் ஷா துக்ளக்
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து, பல நீர்ப்பாசன கால்வாய்களை வெட்டியவர் யார்?
பிரோஷ் ஷா துக்ளக்
1200 புதிய தோட்டங்களை உருவாக்கியவர் யார்?
பிரோஷ் ஷா துக்ளக்
பிரோஷ் ஷா துக்ளக் நிறுவிய புதிய நகரங்கள் எவை?
பிரோஷாபாத், ஜான்பூர், ஹிசார், பிரோஷ்பூர்
பிரோஷ் ஷா துக்ளக் எப்போது மறைந்தார்?
1388 (83 வயதில்)
தைமூர் படையெடுப்பு எப்போது நடைபெற்றது?
கி.பி. 1398 டிசம்பர்
'தாமர்லைன்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
தைமூர்
தைமூர் எப்பகுதியை ஆட்சி செய்தார்?
சாமர்கண்ட் (மத்திய ஆசியா)
தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி எது?
பஞ்சாப்
சையது அரச வம்சத்தின் காலம் என்ன?
கி.பி. 1414 - 1451
டெல்லியை விட்டு செல்வதற்கு முன்பாக, தைமூர் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு யாரை ஆளுநராக நியமித்தார்?
கிசிர்கான் (டெல்லி, மீரட், பஞ்சாப்)
1414 ல் சையது அரசவம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
கிசிர்கான்
சையது வம்சத்தின் கடைசி சுல்தான் யார்?
அலாவுதீன் ஆலம்ஷா
லோடி வம்சத்தின் காலம் என்ன?
1451 - 1526
லோடி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
பக்லூல் லோடி
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
சிக்கந்தர் லோடி
சிக்கந்தர் லோடிக்கு பின் அரசப் பதவியேற்றவர் யார்?
இப்ராகிம் லோடி (1517 இல்)
லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து யார்?
பாபர்
பாண்டியர்களின் தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
காசு, கழஞ்சு, பொன்
அடிமை வம்சத்தின் காலம் என்ன?
1206 - 1290
இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?
முகமது கோரி (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)
'பண்டகன்' என்பதன் பொருள் என்ன?
இராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள்
'பண்டகன்' என்பது எம்மொழிச்சொல்?
பாரசீகச் சொல்
முகமது கோரி எப்போது இறந்தார்?
1206
முகமது கோரியின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
குத்புதீன் ஐபக்
அடிமை வம்ச அரசுக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்?
குத்புதீன் ஐபக்
அடிமை வம்ச அரசு எவ்வாறு அழைக்கப்பட்டது?
மம்லுக் அரச மரபு
'மம்லுக்' என்னும் அராபியச் சொல்லுக்கு என்ன பொருள்?
அடிமை
அடிமை வம்சத்தினர் இந்தியத் துணைக்கண்டத்தை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
84 ஆண்டுகள்
குத்புதீன் ஐபக் எதனை தலைநகராகக் கொண்டு ஆட்சியைத் தொடங்கினார்?
லாகூர்
குத்புதீன் ஐபக் தனது தலைநகரை லாகூரிலிருந்து எங்கு மாற்றினார்?
டெல்லி
குத்புதீன் ஐபக் கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தார்?
பக்தியார் கில்ஜி
குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர் யார்?
குத்புதீன் ஐபக்
இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மசூதி எது?
குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் (டெல்லி)
குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
குத்புதீன் ஐபக்
குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார்?
இல்துமிஷ்
குத்புதீன் ஐபக் எந்த விளையாட்டின் போது இறந்தார்?
போலோ விளையாட்டு (குதிரையிலிருந்து தவறி விழுந்ததில்)
குத்புதீன் ஐபக் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
கி.பி. 1210
குத்புதீன் ஐபக்கின் மகன் யார்?
ஆரம் ஷா (திறமையற்றவர்)
இல்துமிஷை சுல்தானாக தேர்வு செய்தவர்கள் யார்?
துருக்கிய பிரபுக்கள்
இல்துமிஷ் ஆட்சி காலத்தில் இந்திய ஆட்சிப்பகுதிகளை அச்சுறுத்தியது யார்?
செங்கிஸ்கான் (மங்கோலியர்)
மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காக இல்துமிஷ் எந்த குழுவை உருவாக்கினார்?
சகல்கானி அல்லது நாற்பதின்மர் குழு
இக்தா நிலத்தை பெற்றவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
இக்தாதார் அல்லது முக்தி
இல்துமிஷ் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
26 ஆண்டுகள்
இல்துமிஷ் எப்போது மறைந்தார்?
1236 ஏப்ரல்
இல்துமிஷின் மகன் யார்?
ருக்னுதீன் பிரோஷ்
இல்துமிஷின் மகள் யார்?
சுல்தானா ரஸியா
இல்துமிஷ் யாரை டெல்லியின் அரியணைக்கான வாரிசாக அறிவித்தார்?
சுல்தானா ரஸியா
இந்தியாவை ஆண்ட முதல் பெண் அரசி யார்?
சுல்தானா ரஸியா
சுல்தானா ரஸியா தனது தனி உதவியாளராக யாரை நியமித்தார்?
ஜலாலுதீன் யாகுத் (எத்தியோப்பிய அடிமை)
சுல்தானா ரஸியா காலத்தில் பஞ்சாபின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்?
மங்கோலியர்கள்
சுல்தானா ரஸியா யாருக்கு ஆதரவாக இருந்தார்?
துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு
சுல்தானா ரஸியா 1240 இல் யாரால் கொலையுண்டார்?
துருக்கிய பிரபுக்கள்
சுல்தானா ரஸியாவிற்குப் பின்னர் ஆட்சி செய்தவர் யார்?
கியாசுதீன் பால்பன் (1266 - 1287)
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment