திருக்குறள் அதிகாரம்:தவம் திருக்குறள்:266 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. விளக்கம்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. பழமொழி A bused patience turns to fury. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இரண்டொழுக்க பண்புகள் 1. எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவேன். 2. என் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் அவ்வாறே செய்ய ஊக்குவிப்பேன். பொன்மொழி உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. - விவேகானந்தர் பொது அறிவு * யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகம் எது? மெசபடோமியா * மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? சுமேரியர் English words & meanings Atmosphere - air which surrounds the earth. வளிமண்டலம். பூமியை சுற்றி கம்பளம் போல் மூடி உள்ள வாயுக்களின் கலவை. Accurate - more correct. Results without mistakes. துல்லியமாக. மிக